கண்ணீர் தரா வெங்காயம்-விஞ்ஞானிகள் சாதனை

சிட்னி: கண்ணீர் சிந்த வைக்காத வெங்காயத்தை உருவாக்கிவிட்டனர் விஞ்ஞானிகள்.
எதற்குமே கண் கலங்காதவர்களையும் கண்ணீர் விட வைக்கும் ஆற்றல் கொண்டது வெங்காயம். இந் நிலையில் கண்களுக்கு எரிச்சலூட்டாத, மூக்கு சிந்த வைக்காத வெங்காயத்தை உருவாக்கியுள்ளனர் நியூசிலாந்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள்.
வெங்காயத்தில் உள்ள கந்தகம் தான் அதை வெட்டும்போது காற்றில் பரவி கண்களை எரிச்சலூட்டுகிறது.
இந் நிலையில் நியூசிலாந்தின் கிராப் அண்ட் புட் ஆய்வு நிறுவனம், ஆஸ்திரேலியாவின் பயோ-டெக்னாலஜி தொழில்நுட்பத்தை வைத்து வெங்காயத்தின் ஜீன்களை வெட்டி ஒட்டி (gene-silencing technology), கண்ணீரை வரவழைக்கும் கந்தகத்தை உருவாக்கும் என்ஸைமை (enzyme) செயல் இழக்கச் செய்துள்ளனர்.
மேலும் இந்த என்ஸைமை வீணாக்காமல் அதை நல்ல வாசனையைத் தரும் விதத்திலும் மாற்றியமைத்துள்ளனர். இதனால் இந்த வெங்காயத்தில் நல்ல வாசனையும் வருகிறதாம்.
ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வெங்காயம் புழக்கத்துக்கு வர பல ஆண்டுகள் ஆகுமாம்.
அதுவரை அழுவோம்.












Click it and Unblock the Notifications