சென்னை ஐஐடி இயக்குநருக்கு உயர்நீதமன்றம் நோட்டீஸ்
சென்னை: சென்னை ஐஐடி இயக்குநர் பதவியில் நீடிப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நான்கு வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு கூறி ஐஐடி இயக்குநர் டாக்டர் ஆனந்த்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னை ஆழ்வார்ப்பேட்டையைச் சேர்ந்த முரளிதரன் என்பவர் இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள ரிட் மனுவில், நான் ஐஐடியில் பி.எச்.டி. முடித்துள்ளேன். டாக்டர் ஆனந்த் 2001ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இயக்குநராக இருந்து வருகிறார்.
2007ம் ஆண்டு ஜூலை மாதம் மேலும் 5 ஆண்டுகளுக்கு அவர் இயக்குநராக நியமித்து மத்திய மனித வளத்துறை உத்தரவிட்டது.
இது ஐஐடி கவுன்சில் மற்றும் அதன் நிலைக்குழு ஆகியவற்றின் விதிமுறைகளுக்கு முற்றிலும் முரன்பாடானது. இந்த இரு குழுக்களின் ஒப்புதலையும் பெறாமல் ஆனந்த் மீண்டும் இயக்குநர் பதவியில் அமர்த்தப்பட்டுள்ளார்.
ஆனந்த்தின் முதல் பதவிக்காலம் 2006ம் ஆண்டு டிசம்பர் மாதம் முடிவடைந்தது. அதன் பின்னர் அவர் முறைப்படி பதவியிலிருந்து விலகியிருக்க வேண்டும். ஆனால் அப்போதைய பதிவாளர், எந்தவித அதிகாரமும் இல்லாத நிலையில், ஆனந்த்தின் பதவிக்காலத்தை 2007ம் ஆண்டு ஜூன் மாதம் வரை நீட்டித்து உத்தரவிட்டார். இது சட்டவிரோத செயலாகும்.
எனவே இயக்குநர் பதவியிலிருந்து ஆனந்த்தை நீக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த அவர் நான்கு வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு கூறி ஆனந்த்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications