உளவுத்துறை எச்சரிக்கையை மீறி யாத்திரையை தொடங்கினார் அத்வானி
டெல்லி: தற்கொலைப் படைத்தாக்குதல் நடைபெறலாம் என உளவுத்துறை எச்சரித்திருந்த போதிலும் திட்டமிட்டபடி தனது சங்கல்ப ரத யாத்திரையை பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி இன்று ஜபல்பூரில் தொடங்கினார்.
பாஜக மூத்த தலைவரும், பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளவருமான எல்.கே.அத்வானியை தற்கொலைப் படைத் தாக்குதல் மூலம் கொல்ல தீவிரவாதிகள் திட்டம் தீட்டியிருப்பதாக மத்திய
உள்துறை எச்சரித்தது.
இதையடுத்து மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரிலிருந்து திட்டமிடப்பட்டிருந்த சங்கல்ப ரத யாத்திரையை அவர் ஒத்தி வைக்க மத்திய அரசு கேட்டு கொண்டது.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணனும் அத்வானியை நேரில் சந்தித்து இதுகுறித்து விவாதித்தார்.
இதனால் பாஜக வட்டாரத்தில் அதிர்ச்சியும், பரபரப்பும்
ஏற்பட்டது. யாத்திரை ஒத்தி வைக்கப்படும் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இதனை நேற்று மாலை பாஜக மேலிடமும் உறுதி செய்தது.
ஆனால் இன்று யாருமே எதிர்பாக்காத நிலையில் அத்வானி உளவுத்துறையின் எச்சரிக்கையை மீறி ஜபல்பூரில் இருந்து தனது பயணத்தை தொடங்கினார்.
யாத்திரையை தொடங்கிய அவர் தீவிரவாதிகளின் மிரட்டலுக்கு எப்போதும் அடிபணிய மாட்டோம் என கூறியுள்ளார். இந்த செய்தியை பாரதிய ஜனதா பொது செயலாளர் வெங்கையா நாயுடு உறுதி செய்துள்ளார்.
தீவிரவாதிகளின் மிரட்டலுக்கு பாரதிய ஜனதா ஒருபோது பயப்படாது எனவும், அத்வானியின் யாத்திரை குறிப்பிட்டபடி சாலை, ரயில் மற்றும் விமானம் மூலம் நடைபெறும் எனவும் அவர் கூறினார்.
அத்வானியின் பாதுகாப்பிற்காக அவர் செல்லும் இடங்களில் எல்லாம் வரலாறு காணாத பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ராணுவத்தினரும் இந்த பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications