தென்காசி குண்டு வெடிப்பு: 2 மாணவர்கள் உட்பட மேலும் 4 பேர் கைது
தென்காசி: தென்காசி குண்டு வெடிப்பு சம்பவத்தில் 2 மாணவர்கள் உட்பட மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
தென்காசி ஆர்எஸ்எஸ் அலுவலகம் மற்றும் புதிய பேருந்து நிலையத்தில் கடந்த ஜனவரி 24ம் தேதியன்று குண்டுகள் வெடித்தது.
இது தொடர்பாக டிஐஜி கண்ணப்பன் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரித்து குமார் பாண்டியனின் அண்ணன் ரவிபாண்டியன், குமார் என்ற கேடிசி குமார், நாராயண சர்மா ஆகிய 3 பேரை நேற்று முன்தினம் (4ம் தேதி) கைது செய்தனர்.
இது தொடர்பாக மேலும் பலரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக டிஐஜி கண்ணப்பன் தெரிவித்தார்.
இந் நிலையில் போலீசார் தென்காசி கூலக்கடை பஜாரை சேர்ந்த சங்கரலிங்கம் மகன் வேல்முருகன், செங்கோட்டை விஸ்வகர்ம தெருவை சேர்ந்த அய்யப்பன் மகன் பாலமுருகன், சங்கரன் மகன் மாசாணம் என்ற மகேஷ் மற்றும் தென்காசி அரசு மகன் முருகன் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
இவர்களிடமிருந்து 2 வெடிகுண்டுகளும், 6 டெட்டனேட்டர்களும், கைப்பற்றப்பட்டன. கைதானவர்களில் பாலமுருகன் ஐடிஐயிலும், வேல்முருகன் தனியார் பயிற்சி பள்ளியிலும் பயின்று வருகின்றனர். மகேஷ் பிளம்பராகவும், முருகன் கட்டிட தொழிலாளியாகவும் உள்ளார்.
குண்டுவெடிப்பு வழக்கில் மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications