மின் கம்பத்திலிருந்து தண்ணீர் கொட்டியதால் பரபரப்பு!
தூத்துக்குடி: தூத்துக்குடியில் மின் கம்பத்திலிருந்து தண்ணீர் கொட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி பங்களா தெருவில் இரும்பு குழாயால் ஆன மின்கம்பம் ஒன்று உள்ளது. நேற்று காலை 10.30 மணியளவில் இந்த மின்கமபத்தில் இருந்து குடிநீர் குழாய் போல் திடீரென தண்ணீர் கொட்ட தொடங்கியுள்ளது.
இதனால் திடுக்கிட்ட அப்பகுதி மக்கள் உடனடியாக மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மின்வாரிய அதிகாரிகள் அங்கு வந்து ஆய்வு நடத்தினர். அப்போது தண்ணீர் கொட்டியதற்கான காரணம் தெரிய வந்தது.
நேற்று முன்தினம் பெய்த மழை காரணமாக மின்கம்பத்தின் மேல்பாகம் வழியாக தண்ணீர் நிரம்பி உள்ளது. குழாய் போன்ற அமைப்பில் அந்த மின்கம்பம் இருந்ததால் அதனுள் நீர் தேங்கியுள்ளது.
அதன் அழுத்தம் தாங்காமல் ஏற்கனவே துருப்பிடித்திருந்த அடிப்பகுதியில் துவாரம் ஏற்பட்டு அதன் வழியாக மழை நீர் குழாயில் இருந்து கொட்டியுள்ளது. இதையடுத்து அங்கு நிலவிய பரபரப்பு முடிவுக்கு வந்தது.
சுமார் 10 நிமிடத்திற்கும் மேலாக தண்ணீர் கொட்டியதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications