நெருப்பு மூட்டி அதில் குதித்து மூதாட்டி தற்கொலை!
திருவனந்தபுரம்: கேரளாவில் 88 வயது மூதாட்டி, சிதையை மூட்டி அதில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
கேரள மாநிலத் தலைநகர் திருவனந்தபுரம் அருகே உள்ளது வெஞ்சரமூடு கிராமம். இப்பகுதியைச் சேர்ந்தவர் கோமதி அம்மா. 88 வயதாகும் அவருக்கு புற்று நோய் இருந்து வந்தது. இதனால் பெரும் அவதிப்பட்டு வந்தார் கோமதி அம்மா.
இந்த நிலையில் நேற்று இரவு தனது வீட்டுக்கு அருகே மரக் கட்டைகளை அடுக்கி வைத்து அதில் தீ மூட்டினார். பின்னர் அதில் குதித்தார். சிறிது நேரத்திலேயே கோமதி அம்மாள் தீயில் கருகி பரிதாபமாக இறந்து போனார்.
அந்த சமயத்தில் கோமதி அம்மாவின் பேரன் வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்தார்.
அக்கம் பக்கத்தினர் தீ எரிவதைப் பார்த்து விரைந்து வந்தனர். அப்போது கோமதி அம்மாளின் உடல் கருகிய நிலையில் கிடந்ததைப் பார்த்து அதிர்ந்தனர்.
புற்று நோயின் தாக்கத்தைப் பொறுக்க முடியாமல்தான் கோமதி அம்மா இந்த முடிவுக்கு வந்திருக்க வேண்டும் என கூறப்படுகிறது.
88 வயது மூதாட்டியின் இந்த பரிதாப சாவு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications