பள்ளிக்கு செல்ல வற்புறுத்தியதால் வீட்டை விட்டு ஒடிய மாணவி
திண்டுக்கல்: பள்ளிக்கு செல்ல பெற்றோர் வற்புறுத்தியதால் வீட்டை விட்டு ஒடிய மாணவியை போலீசார் மீட்டுள்ளனர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை தாலுக்கா அருகே சீத்தாப்பட்டியில் வசிப்பவர் ராமசாமி. இவரது மகள் ராஜேஸ்வரி (13). இவர் அரசு பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார்.
ராஜேஸ்வரி அடிக்கடி பள்ளி செல்லாமல் விடுமுறை எடுத்து வந்துள்ளார். இதனால் அவரை பள்ளிக்கு செல்ல அவரது பெற்றோர் வற்புறுத்தியுள்ளனர்.
பெற்றோர் பள்ளிக்கு செல்ல வற்புறுத்தியது பிடிக்காமல், ராஜேஸ்வரி வீட்டில் இருந்து ரூ.100ஐ எடுத்துக் கொண்டு பஸ் ஏறி, வடமதுரை சென்றுள்ளார்.
பேருந்து நிலையம் அருகில் மாணவி தனியாக நின்று கொண்டிருந்தது குறித்து தகவல் அறிந்த வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மருதவள்ளி விரைந்து சென்று அந்த மாணவியை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தார். பின்னர் ராஜேவரியிடம் விசாரணை நடத்தி அவரின் பெற்றோர்களுக்கு தகவல் கொடுத்தார்.
பின்னர் ராஜேஸ்வரியை அவரின் பெற்றோர்கள் வந்து அழைத்து சென்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications