பெண் எஸ்ஐயை கண்டித்து மாணவர்கள் திடீர் மறியல்
நெல்லை: நெல்லையில் பெண் சப்-இன்ஸ்பெக்டரைக் கண்டித்து சட்டக் கல்லூரி மாணவர்கள் திடீர் மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நெலலை சட்டக் கல்லூரியில் 2ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் அமிர்தராஜ், ஜெயமுருகன் ஆகியோர் நேற்று காலை பாளை மார்க்கெட்டில் இருந்து ஒரு தனியார் பேருந்தில் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தனர்.
படிகட்டில் பயணம் செய்த அவர்களை அதே பஸ்சில் வந்த பெண் எஸ்ஐ ஒருவரும், பஸ் கண்டக்டரும் உள்ளே வருமாறு கூறினர். ஆனால், கூட்டம் அதிகமாக உள்ளது. எப்படி வரமுடியும் என்று கேட்கவே இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
பெண் எஸ்ஐயும், கண்டக்டரும் அவர்களை சட்டையை பிடித்து தள்ளியதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து இரு மாணவர்களும் சக மாணவர்களிடம் தெரிவிக்கவே இதையடுத்து வகுப்புகளை புறக்கணித்து விட்டு வெளியே வந்த மாணவர்கள் பெண் எஸஐ மற்றும் பஸ் கண்டக்டரை கண்டித்து பாளையங்கோட்டை-திருச்செந்தூர் ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்ததும் மாநகர துணை கமிஷனர் தினகரன், உதவி கமிஷனர் முருகேசன், இன்ஸ்பெக்டர் நாகராஜன் ஆகியோர் சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.
பெண் எஸ்ஐ மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மாணவர்கள் வலியுறுத்தினர். பின்னர் போலீசார் மாணவர்களை சமாதானம் செய்தபிறகு மாணவர்களை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications