இந்தோனேசியாவில் 3 இடங்களில் நிலநடுக்கம்
ஜகார்தா: இந்தோனேசியாவில் 3 இடங்களில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பயந்து வீதிகளில் ஓட்டம் பிடித்தனர்.
இந்தோனேசியாவின் வடக்கு பகுதியில் சுலோவகி தீவில் நேற்று காலையில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் பெரியளவில் சேதம் ஏற்படவில்லை. ஆனால் கட்டடங்கள் பயங்கரமாக ஆடியதால் மக்கள் உயிருக்கு பயந்து வீதிகளில் ஓட்டம் பிடித்தனர்.
இந்த நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவாகியுள்ளது.
இதே போல் இன்று அதிகாலை 2-30 மணியளவில் பாலி தீவில் உள்ள டென்பகார் என்ற இடத்திற்கு அருகே கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதில் அப்பகுதியில் இருந்த சில வீடுகள் சேதமடைந்தன. கடலோரப் பகுதி என்பதால் மக்கள் சுனாமி வந்து விடுமோ என்ற பயத்தில் அலறியடித்துக் கொண்டு ஓடினார்கள்.
இந்த நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவு கோலில் 5.8 ஆக பதிவாகியுள்ளது.
இது நடந்த சிறிது நேரத்திலேயே சம்பாவா தீவு பகுதியிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால் இதனால் பெரியளவில் சேதங்கள் ஏதும் நிகழவில்லை.
இந்த நிலநடுக்கத்தின் அளவு 6.1 ஆக பதிவாகியுள்ளது.
2 நாட்களுக்குள் அடுத்தடுத்து இந்தோனேசியாவில் 3 இடங்களில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அந்நாட்டு மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications