லஞ்ச வழக்கில் சிக்கிய வி.ஏ.ஓவுக்கு மீண்டும் பணி வழங்க நீதிமன்றம் உத்தரவு!
மதுரை: லஞ்ச வழக்கில் சிக்கிய வி.ஏ.ஓவுக்கு மீண்டும் பணி வழங்க மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்த பிச்சை, லஞ்சம் வாங்கியதாக லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்பு இவரை மாவட்ட நிர்வாகம் பணி இடைநீக்கம் (சஸ்பெண்ட்) செய்தது.
இந்த வழக்கை விசாரித்த திருச்சி நீதிமன்றம் அவருக்கு சிறை தண்டனையும், அபராதமும் விதித்தது. இதனால் பிச்சையை 2004ம் ஆண்டு நவம்பர் 16ம் தேதி அன்று பணி நீக்கம் (டிஸ்மிஸ்) செய்து திருச்சி ஆர்.டி.ஓ. உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து பிச்சை தாக்கல் செய்த மனுவை மதுரை உயர் நீதிமன்றக் கிளை தள்ளுபடி செய்துவிட்டது.
மனம் தளராத பிச்சை மீண்டும் நீதிமன்றத்தில் அப்பீல் மனு தாக்கல் செய்தார். இதை நீதிமன்றம் ஏற்று வழக்கை விசாரித்து அவரை விடுதலை செய்துள்ளது.
இந் நிலையில் தனக்கு சம்பள பாக்கி, மற்றும் மீண்டும் பணி வழங்க கோரி பிச்சை திருச்சி ஆர்.டி.ஓவிடம் மனு அளித்தார். ஆனால் அந்த கோரிக்கையை ஆர்.டி.ஓ. நிராகரித்துவிட்டார்.
இதை எதிர்த்து பிச்சை மீண்டும் மதுரை உயர் நீதிமன்றக் கிளையை நாடினார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி நாகமுத்து, பிச்சைக்கு மீண்டும் பணி வழங்கவும் அவரது சம்பள பாக்கியை உடனே வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
-
Tasmac: மதுபானம் விற்கலாம்! ஆனால் சுயமரியாதையை விற்க முடியாது! மதுரை கிளை நீதிபதி அதிருப்தி! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications