பழ.நெடுமாறன் மாநாட்டுக்கு அனுமதி: உயர்நீதிமன்றம் தள்ளுபடி
மதுரை: தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் தலைமையில் நெல்லையில் நடத்தவிருந்த தமிழர் உரிமை மாநாட்டை நடத்த அனுமதி கோரிய மனுவை மதுரை உயர்நீதிமன்ற கிளை ரத்து செய்துவிட்டது.
மக்கள் உரிமை அமைப்பின் சார்பில் நெல்லையில் 10ம் தேதி தமிழர் உரிமை மாநாட்டை நடத்த அதன் ஒருங்கிணைப்பாளரான பழ.நெடுமாறன் ஏற்பாடு செய்திருந்தார்.
ஆனால் இந்த மாநாட்டுக்கு திடீரென்று போலீசார் தடை விதித்தனர். இதையடுத்து மாநாட்டுக்கு அனுமதி அளிக்கக் கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நெடுமாறன் மனு தாக்கல் செய்தார்.
அதில், கடந்த 2000ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் உரிமையை காக்க இந்த அமைப்பு தொடங்கப்பட்டது.
இந்த அமைப்பின் சார்பாக கடலூரில் பிப்ரவரி 2ம் தேதியும், நெல்லையில் வரும் பிப்ரவரி 10ம் தேதியும் நடத்தப்படவிருந்த மாநாடுகளுக்கு கடைசி நேரத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் பட்டினியால் வாடும் தமிழர்களின் நலன் காக்க பல இடங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட மருந்து மற்றும் உணவு பொருட்களை அனுப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு இலங்கைக்கு ஆயுதங்கள் சப்ளை செய்யக் கூடாது. இரு நாடுகளிம் கூட்டு வான் ரோந்து செல்வதை நிறுத்த வேண்டும்.
மக்கள் உரிமை அமைப்பின் கடலூர் மாவட்ட அமைப்பாளர் தமிழீழன், கடலூரில் நடைபெறும் மாநாட்டிற்கு அம்மாவட்ட டிஎஸ்பியிடம் ஜனவரி 7ம் தேதி அனுமதி கேட்டார்.
ஆனால் போலீசார் எந்த காரணமும் இல்லாமல் அனுமதி கேட்ட விண்ணப்பத்தை ஜனவரி 30ம் தேதி நிராகரித்து விட்டனர்.
அதன் பின்னர் நெல்லையில் நடைபெறவிருந்த மாநாட்டிற்கு போலீசார் அனுமதி கொடுத்தனர். மாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்ட பின்னர் மாநாட்டை நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனவே அனைத்து ஏற்பாடுகளும் முடிந்த நெல்லை மாநாட்டை நடத்த அனுமதி தரவேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதி மோகன்ராம் விசாரித்தார். பின்னர், மனுதாரரின் விண்ணப்பம் இன்னும் நெல்லை காவல்துறை ஆணையரின் பரிசீலனையில் உள்ளது. அது நிராகரிக்கப்படவில்லை. இந்த நிலையில் கோர்ட் அதில் தலையிட முடியாது.
ஒரு வேளை மனுதாரரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால், நீதிமன்றத்தை அவர் அணுகலாம் என்று கூறி நெடுமாறனின் மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications