லாலுவுக்கு கன்னட அமைப்பு கருப்புக் கொடி
பெங்களூர்: பெங்களூர் வந்த மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவுக்கு, கன்னட ரக்சனே வேதிகே என்ற கன்னட அமைப்பினர் கருப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கர்நாடகத்தில் கன்னடர்களுக்கு ரயில்வே பணிகளில் பாரபட்சம் காட்டப்படுவதாக கூறி சமீபத்தில் கன்னட ரக்சன வேதிகே அமைப்பினர் பெரும் ரகளையில் ஈடுபட்டனர். பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் ரயில்வே அலுவலகங்களுக்குள் புகுந்து அடித்து நொறுக்கினர்.
இந்த நிலையில் பெங்களூர், யஷ்வந்த்பூர் மாடல் ரயில் நிலையத்தைத் தொடங்கி வைக்க லாலு பிரசாத் இன்று பெங்களூர் வந்தார்.
ரயில் நிலையத்திற்கு லாலு பிரசாத் வந்தபோது அங்கு கூடியிருந்த கன்ன ரக்சன வேதிகே அமைப்பைச் சேர்ந்த 30 பேர் லாலுவுக்கு கருப்புக் கொடி காட்ட முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சுதாரித்த போலீஸார் அனைவரையும் சுற்றி வளைத்துக் கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
பின்னர் நிகழ்ச்சியில் லாலு பிரசாத் யாதவ் பேசுகையில், ரயில்வே பணிகளில் ஆள் எடுக்கும் முறையில் எந்த பாரபட்சமும் காட்டப்படவில்லை. அகில இந்திய அளவில்தான் ஆளெடுப்பு நடக்கிறது.
ரயில்வே பணியில் சேர ஒவ்வொரு இந்தியருக்கும் முழு உரிமை உண்டு. எனவே கன்னடர்களுக்கு பாரபட்சம் காட்டப்படுவதாக கூறுவதில் அர்தமத் இல்லை.
சமீபத்தில் மும்பையில், வட இந்தியர்கள் மீது தாக்குதல் நடந்தது. அனைத்து இந்திய மாநிலங்களையும் போல மகாராஷ்டிரமும், இந்தியர்கள் அனைவருக்கும் சொந்தமானது என்றார் லாலு.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications