ஆளெடுக்கும் இலங்கை ராணுவம்
கொழும்பு: விடுதலைப் புலிகளுடனான போரை உக்கிரப்படுத்தியிருக்கும் இலங்கை ராணுவம், புதிதாக வீரர்களைத் தேர்வு செய்யும் பணியை முடுக்கி விட்டுள்ளது.
இலங்கையில் ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான போர் நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வருகிறது. புலிகளின் பல பகுதிகளை கைப்பற்றி விட்டதாகவும், வடக்கில் இரு மாவட்டங்களில் மட்டுமே விடுதலைப் புலிகள் ஆதிக்கம் இருப்பதாகவும் இலங்கை அரசு கூறி வருகிறது.
எனவே பிரபாகரன் ஆயுதப் போராட்டத்தை விட்டு விட்டு சரணடைய வேண்டும் என இலங்கை ராணுவம் கூறி வருகிறது.
இந்த நிலையில் புலிகளுடனான சண்டையை மேலும் தீவிரப்படுத்தும் விதமாக புதிதாக வீரர்களைத் தேர்வு செய்யும் பணியில் இலங்கை ராணுவம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
குறிப்பாக புலிகளின் முக்கிய கேந்திரமான வன்னிப் பகுதியில் சண்டையை தீவிரப்படுத்தும் பொருட்டு அதிக அளவில் புதிய வீரர்களைத் தேர்வு செய்து வருகிறது ராணுவம்.
இந்த ஆண்டுத் தொடக்கம் முதல் இதுவரை 3000 புதிய வீரர்கள் ராணுவத்தில் சேர்ந்துள்ளதாக ராணுவச் செய்தித் தொடர்பாளர் உதய நாணயக்காரா தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு மொத்தம் 34 ஆயிரம் பேர் சேர்க்கப்பட்டனர். இதன் மூலம் ராணுவ வீரர்களின் பலம் 1 லட்சத்து 50 ஆயிரமாக உயர்ந்தது. தற்போது மொத்தம் 2 லட்சம் பேர் இலங்கை ராணுவத்தில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே, வட மேற்கில் தற்போது கடும் சண்டை நடந்து வரும் மன்னார் பகுதியில் உள்ள நிலவரத்தை ராணுவத் தளபதி சரத் பொன்சேகா நேரில் சென்று பார்வையிட்டார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications