வீரப்பனுக்கு மணிமண்டபம் கட்டும் முத்துலட்சுமி
உளுந்தூர்பேட்டை: சந்தன கடத்தல் வீரப்பனுக்கு மணி மண்டபம் கட்டும் பணியில் அவனது மனைவி முத்துலட்சுமி ஈடுபட்டுள்ளாராம்.
அதிரடிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி உளுந்தூர்பேட்டையில் ஒரு திருமண விழாவில் கலந்து கொள்ள வந்தார். அங்கு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,
என் கணவரைத் தேடுவதாக கூறிக்கொண்டு காட்டுக்குச் சென்ற தமிழ்நாடு மற்றும் கர்நாடக அதிரடிப்படையினர் அங்கிருந்த மலைவாழ் மக்களையும், பெண்களையும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி துன்புறுத்தினர்.
அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவதுடன் தவறு செய்த காவலர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மலைகளில் வாழும் மக்கள் காடுகளையே நம்பி வாழ்ந்து வருகின்றனர்.
ஆனால் தற்போது அந்த மக்களை அங்கிருந்து அகற்றிவிட்டு வனத்துறையினரின் உதவியுடன் அரசியல்வாதிகளும், பெரும் பணக்காரர்களும் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். எனவே வன மசோதா சட்டத்தை அரசு தீவிரமாக அமல்படுத்த வேண்டும்.
என் கணவரின் வாழ்க்கை வரலாற்றை தொகுத்து புத்தமாக வெளியிட உள்ளேன். அப்போது மறைக்கப்பட்ட பல உண்மைகள் வெளிவரும். மேலும் எனது கணவர் புதைக்கப்பட்ட இடத்தில் மணி மண்டபம் கட்டும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளேன். அதற்கான அடிக்கல் நாட்டுவிழா விரைவில் நடக்கும்.
எங்களது மலைவாழ் மக்கள் உரிமை இயக்கம் ஆதிவாசிகள் மேம்பாட்டுப் பணியிலும், அவர்களின் உரிமைகளை மீட்கும் பணியிலும் தொடர்ந்து செயல்படும் என்றார் முத்துலட்சுமி.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications