சென்னையில் வெளி மாநிலத்தவர்கள் கண்காணிப்பு
சென்னை: சென்னையில் வசிக்கும் வெளி மாநிலத்தவர்கள் மீது போலீஸார் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டுள்ளதாக மாநகர காவல்துறை ஆணையர் நாஞ்சில் குமரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பிற மாநிலங்களிலிருந்து சென்னைக்கு வந்து தங்கியிருப்போர் மீது போலீஸார் கண்காணிப்பை மேற்கொண்டுள்ளனர்.
அவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்களா என்பது தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பான உத்தரவு அனைத்துக் காவல் நிலையங்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் தங்கியிருக்கும் வெளிமாநிலத்தவர் மற்றும் வெளிநாட்டினரை தீவிரமாக கண்காணிக்கும்படி போலீஸாரை அறிவுறுத்தியுள்ளோம்.
பல வெளிநாட்டு நிறுவனங்கள் சென்னையில் தங்களது அலுவலகங்களை அமைத்துள்ளனர். இந்த நிறுவனங்களின் கட்டுமான் பணி உள்ளிட்டவற்றில் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
குறிப்பாக பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களைச் சேர்ந்த பல தொழிலாளர்கள் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளனர். எனவேதான் வெளி மாநிலத்தவர் மீது கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளோம்.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு குற்றச் செயல்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. கடந்த 2 மாதங்களில், தீவிர கண்காணிப்புகாரணமாக, 124 வழக்குகளில் முடிவு தெரிய வந்துள்ளது. பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட 148 கிரிமினல்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரூ. 1 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், பொருட்கள் அவர்களிடமிருந்து பறிமுதல் செயய்ப்பட்டுள்ளது.
அதேபோல, ரூ. 3 கோடி மதிப்புள்ள திருட்டு விசிடிக்களும், கம்ப்யூட்டர்களும் போலீஸ் வேட்டையில் சிக்கியுள்ளது.
காதலர் தினக் கொண்டாட்டத்திற்கு போலீஸார் இடையூறாக இருக்க மாட்டார்கள். அதேசமயம், அத்துமீறுவோர், பொது இடங்களில் தவறாக நடந்து கொள்வோர் மீது மட்டுமே நடவடிக்கை எடுப்பார்கள் என்றார் நாஞ்சில் குமரன்.
-
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications