பாக். தொழிலாளர் காதைக் கடித்த இந்தியர்
துபாய்: குவைத்தில், பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த தொழிலாளரின் காதை, இந்தியத் தொழிலாளர் ஒருவர் கடித்தார். ரத்தம் சொட்டச் சொட்ட பாகிஸ்தான் தொழிலாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் குவைத்தில் டிரைவராகப் பணியாற்றி வருகிறார். அவர் தனது ஸ்பான்சரின் மகனை பள்ளிக்கூடத்திற்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தார்.
காரில் அந்த சிறுவனின் தாயாரும், பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒரு தொழிலாளரும் உடன் இருந்தனர்.
அப்போது சிறுவனின் தாயாருக்கும், பாகிஸ்தான் காரருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பாகிஸ்தான்காரர், சிறுவனின் தாயாரை தரக்குறைவாக பேசியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த இந்தியர், கோபத்தில் பாகிஸ்தான் காரருடன் சண்டை போட்டுள்ளார். அப்போது அவரது காதை பலமாக கடித்து விட்டார்.
காது கடிபட்ட பாகிஸ்தான்காரருக்கு ரத்தம் கொட்டியது. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
சம்பந்தப்பட்ட இந்தியர் யார், அவரது பெயர் என்ன, அவர் கைது செய்யப்பட்டாரா என்பது குறித்து தகவல் வெளியிடப்படவில்லை.












Click it and Unblock the Notifications