மேற்கு வங்க காங். தலைவர் தாஸ்முன்ஷி
டெல்லி: மேற்கு வங்க மாநில காங்கிரஸ் தலைவராக மத்திய அமைச்சர் பிரிய ரஞ்சன் தாஸ் முன்ஷி நியமிக்கப்பட்டுள்ளார்.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள லோக்சபா தேர்தல் மற்றும் சில மாநில சட்டசபைத் தேர்தலைக் கணக்கில் கொண்டு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, கட்சி நிர்வாகிகள் சிலரை மாற்றியுள்ளார்.
சட்டசபைத் தேர்தலை சந்திக்கவுள்ள ஜம்மு காஷ்மர் மாநில காங்கிரஸ் தலைவராக மத்திய அமைச்சர் பேராசிரியர் சைபுதீன் சோஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்தியப் பிரதேச மாநில காங்கிரஸ் தலைவராக மத்திய அமைச்சர் சுரேஷ் பச்சோரி நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய அமைச்சர் அர்ஜூன் சிங்கின் மகன் அஜய் சிங், மத்திய பிரதேச மாநில தேர்தல் பிரசாரக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தாஸ்முன்ஷி தற்போது மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறையைக் கவனித்து வருகிறார். அதில் ஒன்றை அவர் விட்டு விடுவார் எனத் தெரிகிறது. அதேபோல சுரேஷ் பச்சோரியும் தன்னிடம் உள்ள துறைகளில் ஒன்றை விடுவார்.
சைபுதீன் சோஸ், நீர்வளத்துறையை மட்டும் வைத்திருப்பதால் தொடர்ந்து அப்பொறுப்பில் அவர் நீடிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது மேற்கு வங்க மாநில காங்கிரஸ் தலைவராக மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி இருந்து வந்தார். அவருக்குப் பதில் தாஸ்முன்ஷிக்கு தலைவர் பொறுப்பு கிடைத்துள்ளது.
ஏற்கனவே 1985 முதல் 1988 வரை காங்கிரஸ் தலைவராக முன்ஷி இருந்துள்ளார். நான்கு ஆண்டுகள் தேசிய இளைஞர் காங்கிரஸ் தலைவராகவும் இருந்தார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications