கன்னட அமைப்பினர் ஆவேசம் - பெங்களூர் ரயில்வே அலுவலகம் சூறை

தென் மேற்கு ரயில்வேயில் கன்னடர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள் தரப்படுவதில்லை, அவர்கள் புறக்கணிக்கப்படுவதாக கூறி கன்னட ரக்சன வேதிகே அமைப்பு இதுபோன்ற போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
அவர்கள் அடிக்கடி பெங்களூர் ரயில் நிலையம், ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தை தாக்கி நொறுக்கி வருகின்றனர்.
சமீபத்தில் பெங்களூர் யஷ்வந்தபூர் மாதிரி ரயில் நிலையத்தைத் தொடங்கி வைக்க ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் வந்தபோது அவருக்குக் கருப்புக் கொடி காட்டினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய லாலு, ரயில்வே பணிகளில் பிராந்திய அடிப்படையில் பணிகள் வழங்க முடியாது. இது அகில இந்திய அளவில் மேற்கொள்ளப்படும் பணி. இதில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் என பிரித்து வழங்க முடியாது என்றார்.
லாலுவின் இந்தப் பேச்சால் கொதிப்படைந்த கன்னட ரக்சன வேதிகே அமைப்பைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் நேற்று பெங்களூர் கோட்ட மேலாளர் அலுவலகத்திற்கு வந்தனர். கண்ணில் பட்ட பொருட்களை எல்லாம் அடித்து நொறுக்கினர்.
கம்ப்யூட்டர்கள், கண்ணாடிகள், மர மேசைகள், இருக்கைகளை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர்.
உடனடியாக ரயில்வே பாதுகாப்புப் படையினர் விரைந்து வந்து கூட்டத்தினரை கலைந்து போகச் செய்தனர். யாரையும் போலீஸார் கைது செய்யவில்லை.
லாலுவைக் கண்டித்து மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் சார்பில் அவரது கொடும்பாவி எரிப்புப் போராட்டம் நடைபெற்றது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications