வதந்தி பரப்பிய உளவுப்பிரிவு இன்ஸ்பெக்டர்!
சென்னை: தேனி மலைப் பகுதியில் பிடிபட்ட நக்சலைட் தலைவர் மகாலிங்கம் என்கிற நொண்டி மகாலிங்கம் தப்பி விட்டதாக வதந்தி பரப்பியதாக காவல்துறை இன்ஸ்பெக்டர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தேனி மாவட்டம் வருசநாடு மலைப் பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு நடந்த அதிரடி வேட்டையில், போலீஸாரின் துப்பாக்கிச் சண்டைக்குப் பின்னர் பிடிபட்டவர் மகாலிங்கம் (55). இவரது தோள்பட்டையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்ததால் காயமடைந்த அவரை சில நாட்களுக்கு முன்பு சென்னைக்குக் கொண்டு வந்தனர்.
அவரை பரிசோதித்த சென்னை அரசு மருத்துவமனை டாக்டர்கள், அவருக்கு சர்க்கரை வியாதி உள்பட பல உடல் நலக் கோளாறுகள் உள்ளன. எனவே உடனடியாக அறுவைச் சிகிச்சை செய்ய முடியாது என்று தெரிவித்து விட்டனர்.
இதனால் ஒரு வாரத்திற்கு அவரை புழல் சிறையில் அடைத்து வைக்க போலீஸார் முடிவு செய்தனர். அதன்படி புழல் சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து பலத்த பாதுகாப்புடன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார் மகாலிங்கம். அவர் இருந்த பிளாக்கில் அல் உம்மா கைதிகள், வீரப்பனின் கூட்டாளிகள் உள்பட 14 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருக்கும் அறையின் வெளிப் பகுதியில் மின்சார வேலி அமைக்கப்பட்டுள்ளது. அவ்வளவு எளிதில் தப்ப முடியாதபடி கடும் பாதுகாப்புகள் நிறைந்தது இந்த பிளாக்.
மேலும் ரகசியக் காமராக்கள் மூலமும் இவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இந் நிலையில் நேற்று இரவு மகாலிங்கம் தப்பி விட்டதாக போலீஸாருக்குத் தகவல் வந்தது. இதையடுத்து பரபரப்பு ஏற்பட்டது. நகர் முழுவதும் தீவிர வாகன சோதனைக்கு உத்தரவிடப்பட்டது.
ஆனால் அந்த சமயத்தில் மகாலிங்கம் சிறை அறையில் தூங்கிக் கொண்டிருந்தார். இதனால் போலீஸார் குழப்பமடைந்தனர். அவர் தப்பவில்ைல என பின்னர் சென்னை போலீஸாருக்குத் தகவல் தரப்பட்டது.
மகாலிங்கம் தப்பியதாக தகவல் பரப்பியது யார் என்று விசாரித்தபோது உளவுப் பிரிவு இன்ஸ்பெக்டர் ஒருவர்தான் இந்த வதந்தியை பரப்பியுள்ளார் என்பது தெரிய வந்தது.
சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டரை இடமாற்றம் செய்ய உயர் அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர். இதனால் கடுப்பான அவர் மகாலிங்கம் தப்பி விட்டதாக தகவல் பரவினால் ஒட்டுமொத்த காவல்துறையும் கதி கலங்கிப் போகும், அலைக்கழிக்கப்படும் என்ற 'நல்ல' எண்ணத்தில் இப்படி வதந்தி பரப்பியிருக்கிறார்.
இதையடுத்து அவர் மீது கடும் நடவடிக்கை எடுப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனையில் உள்ளனராம்.
-
சென்னையில் 6 சிட்டிங் திமுக எம்எல்ஏக்களுக்கு ‘கல்தா’.. அண்ணா நகர் முதல் வில்லிவாக்கம் வரை.. லிஸ்ட் -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. மீண்டும் தமிழகத்தில் வெளுக்க போகும் மழை.. தென் மாவட்டங்களுக்கு அலர்ட்! -
15 out of 16: சென்னை மாவட்டத்தில் எத்தனை தொகுதிகளில் திமுக போட்டி? சத்யராஜ் மகளுக்கு சீட் இல்லை! -
எம்.எல்.ஏ பதவியா? மேயர் நாற்காலியா? ஆட்சிக்கு வந்ததுமே ஸ்டாலினுக்கு ‘செக்’ வைத்த ஜெயலலிதா -
அடுத்த ரவுண்டு ஆரம்பம்.. வெயிலுக்கு பிரேக் தரும் மழை.. 2 ஆம் தேதி வரை கொளுத்த போகுது! வானிலை மையம் -
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
Vijay: வேணும்னே பண்றாங்க.. 10 குற்றச்சாட்டுகளுடன் தலைமை செயலகத்துக்கு நேரில் போன விஜய்! -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி












Click it and Unblock the Notifications