பாமக எம்எல்ஏவுக்கு திமுகவினர் அடி-உதை!
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே நடந்த பாமக பொதுக் கூட்டத்தில் திமுகவினர் தாக்குதல் நடத்தினர். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டையில் பாமக சார்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. அதில் தர்மபுரி பாமக எம்.எல்.ஏ. வேலுச்சாமி உள்பட பல முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர். அவர்கள் பேசுகையில், திமுகவையும், திமுக அரசையும் மிகக் காட்டமாக விமர்சித்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த திமுகவினர் உருட்டுக் கட்டை, சோடா பாட்டில், கற்கள் சகிதம் பாமக பொதுக் கூட்டத்திற்குள் புகுந்தனர். மேடையில் இருந்த பாமக எம்.எல்.ஏ. வேலுசாமி மற்றும் நிர்வாகிகள் மீது கடும் தாக்குதல் நடத்தினர்.
வேலுசாமிக்கு அடி, உதை விழுந்தது. இத் தாக்குதலில் அவர்கள் காயமடைந்தனர்.
மேலும் மேடையில் இருந்த டியூப் லைட், தட்டி, பேனர் ஆகியவையும் அடித்து நொறுக்கப்பட்டன. இத் தாக்குதல் குறித்து பா.ம.கவினர் புதுக்கோட்டை போலீசில் புகார் செய்துள்ளனர்.
இது குறித்து வேலுசாமி கூறுகையில், கூட்டத்திற்குள் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்து திமுகவினர் எங்கள் அமைப்பினர் மீது கடும் தாக்குதல நடத்தினர். பாதுகாப்பு அளிக்க வேண்டிய போலீசார் திமுகவினர் வன்முறை எல்லாம் முடிந்த பின்பே வந்தனர். திமுகவினரையும், அவர்களது அடியாட்களையும் உடனே கைது செய்ய வேண்டும் என்றார்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications