எஸ்.சி.வி. ஆபரேட்டர்கள் கைது-போலீஸ் மீது தயாநிதி மாறன் புகார்

இன்று காலை சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு தயாநிதி மாறன் வந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ஆணையர் அலுவலகத்திற்குள் சென்று புகார் மனுவைக் கொடுத்து விட்டு வெளியே வந்த தயாநிதி மாறன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகம் முழுவதும் எஸ்.சி.வி.யின் கட்டமைப்புக்குள் உள்ள கேபிள் டிவி ஆபரேட்டர்களை போலீஸார் எந்தவிதக் காரணமும் இன்றிக் கைது செய்து வருகின்றனர்.
நேற்று தென் சென்னையில் மட்டும் 25 பேரைக் கைது செய்துள்ளனர். இரவு நேரங்களில் வீடு வீடாகப் போய் கைது செய்கிறார்கள்.
இந்த கைது நடவடிக்கைகள் குறித்து முதல்வர் கருணாநிதிக்குத் தெரியாது என்று நம்புகிறேன். ஒரு வேளை இது அவருக்குத் தெரிய வந்தால், கண்டிப்பாக தவறு செய்தவர்கள் மீது அவர் கடும் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை எனக்கு மட்டுமல்ல, தமிழ் மக்கள் அனைவருக்கும் உள்ளது என்றார் தயாநிதி மாறன்.
தயாநிதி மாறனின் இந்தப் புகார் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சன் டிவிக்கும், கலைஞர் டிவிக்கும் இடையிலான மோதல் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. இந்த மோதலின் உச்சமாக சமீபத்தில் சன் டைரக்ட் டிடிஎச் சேவையை சன் டிவி அறிமுகப்படுத்தியது.
இந் சேவையில் பல சலுகைகளையும் அது அறிவித்தது. இந்த நிலையில், எஸ்சிவியின் கீழ் வரும் கேபிள் டிவி ஆபரேட்டர்களை போலீஸார் கைது செய்வதாக தயாநிதி மாறன் புகார் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
Annamalai: பாஜக தலைவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை! அண்ணாமலை உருக்கம்! -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்!












Click it and Unblock the Notifications