ஆற்றில் கவிந்த பஸ்-49 பேர் காயம்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் சின்னக்காளிப்பட்டி என்ற இடத்தில் ஆற்றுக்குள் பஸ் கவிழ்ந்து 49 பேர் காயமடைந்தனர்.
கும்பகோணத்திலிருந்து இன்று காலை அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்தது. விழுப்புரம் மாவட்டம் சின்னக்காளிப்பட்டி என்ற இடத்தில் தென்பென்னையாறு பாலம் மீது பஸ் வந்து கொண்டிருந்தது.
அப்போது திடீரென பேருந்து டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி தாறுமாறாக ஓடியது. பின்னர் பாலச் சுவரை இடித்துத் தள்ளி ஆற்றுக்குள் கவிழ்ந்தது.
வறண்டு கிடந்த ஆற்றுக்குள், 25 அடி உயரத்திலிருந்து பேருந்து விழுந்ததில் டிரைவர் உள்பட 49 பேர் காயமடைந்தனர். பேருந்தில் மொத்தம் 65 பேர் இருந்தனர்.
டிரைவரும், கண்டக்டரும் படுகாயமடைந்தனர். அவர்கள் உள்பட 37 பேர் பண்ருட்டி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். 7 பேர் விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கும், 5 பேர் புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications