விஸ்வரூபம் எடுக்கும் மதுரை சுடுகாட்டு பிரச்சனை
மதுரை: மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையம் அருகில் உள்ள சுடுகாடு தொடர்பான பிரச்சனை வலுத்துள்ளது. இதுதொடர்பாக நடந்த சமரசப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது.
மதுரை சம்பக்குளம் பொது மக்களுக்கு உரிய சுடுகாடு மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையம் அருகில் புதூர் செல்லும் சாலையில் உள்ளது.
இந்த இடத்திற்கு எதிரில் ஒரு வணிக வாளாகம் கட்டப்பட்டு வருகிறது. இதையடுத்து சுடுகாட்டை வேறு இடத்திற்கு மாற்ற மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில் இந்த பகுதியில் சில தினங்களுக்கு முன்பு ஒருவர் இறந்தார். அவரது உடலை சுடுகாட்டுக்கு கொண்டு வந்து தகனம் செய்ய முயன்றனர். ஆனால் அதை அனுமதிக்காமல் மாநகராட்சி ஊழியர்கள் எதிர்த்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த இறந்தவரின் உறவினர்கள் பிணத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். நிலைமை மோசமானதால், உடலைத் தகனம் செய்ய மாநகராட்சி ஊழியர்கள் அனுமதித்தனர்.
இந்த நிலையில் அன்று இரவோடு இரவாக சுடுகாட்டை புல்டோசர் வைத்து மாநகராட்சி ஊழியர்கள் இடித்துத் தரைமட்டமாக்கினர்.
இதையடுத்து அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்ைத முற்றுகையிட்டுப் போராட்டத்தில் குதித்தனர்.
இதையடுத்து பிரச்சினையைத் தீர்க்க மாவட்ட நிர்வாகம் சமரசப் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தது. காவல்துறை, மாநகராட்சி நிர்வாகம், பொதுமக்கள் என முத்தரப்பினர் இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.
ஆனால் பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்படவில்லை. இதனால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.
சுடுகாடு தொடர்பாக வலுத்து வரும் இந்தப் பிரச்சினையில் சம்பக்குளம் பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications