செளதியில் டாக்டர் வேலை-தமிழக அரசிடம் மனு செய்யலாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: செளதி அரேபிய அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நல மருத்துவர்களுக்கான வேலை வாய்ப்புகள் காத்திருப்பதாக சென்னையில் உள்ள தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து அதன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான பிந்து மாதவன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

செளதி அரேபியா சுகாதார அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் குழந்தைகளுக்கான இதய மருத்துவ மையத்தில் பணியாற்ற இதய அறுவை சிகிச்சையில் நிபுணர்கள், குழந்தை நல மருத்துவர்கள், மயக்க மருந்து நிபுணர்கள்,

மற்றும் மகளிர் இ.சி.ஜி. டெக்னீசியன்கள், மகளிர் ரெஸ்பிரேட்டரி தெரபி டெக்னீசியன்கள், குழந்தை நல கேத்தரைசேஷன் டெக்னீசியன்கள், 3 ஆண்டு அனுபவம் பெற்ற பர்யூசனிஸ்டுகள், தீவிரி சிகிச்சைப் பிரிவில் 3 ஆண்டு அனுபவம் பெற்ற பெண் நர்சுகள் தேவைப்படுகிறார்கள்.

உரிய கல்வித்தகுதி, பணி அனுபவம் பெற்ற சிறப்பு டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள் தங்களின் கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் ஆகியவற்றின் நகல்கள் மற்றும் வண்ண புகைப்படத்துடன் விண்ணப்பத்தை சென்னையில் உள்ள அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு உடனடியாக அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர், அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், தமிழ்நாடு வீட்டுவசதி வணிக வளாகம், முதல் தளம், எண் 48, டாக்டர் முத்துலட்சுமி சாலை, அடையாறு, சென்னை 600 020.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+