இந்தியன் பிரீமியர் லீக்: 82 வீரர்கள் இன்று ஏலம்!!
மும்பை: இந்தியன் பிரீமியர் லீக்கில் இடம்பெற்றுள்ள 82 சர்வதேச மற்றும் தேசிய வீரர்கள் இன்று மும்பையில் ஏலம் விடப்படுகின்றனர்.
இந்திய கிரிக்கெட் வாரியம் தொடங்கியுள்ள லீக்தான் இந்தியன் பிரிமீயர் லீக். 20-20 போட்டித் தொடரை இந்த லீக் நடத்தவுள்ளது. ஏப்ரல் 18ம் தேதி இப்போட்டித் தொடர் பெங்களூரில் தொடங்குகிறது.
டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூர், மொஹாலி, கொல்கத்தா, ஹைதராபாத் உள்பட மொத்தம் 8 அணிகள் இதில் பங்கேற்கின்றன. சில மாதங்களுக்கு முன்பு இந்த அணிகள் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டன.
இந்த அணிகளில் இடம் பெறுவதற்காக 82 இந்திய மற்றும் சர்வதேச வீரர்களை ஏலம் விடும் பணி இன்று முற்பகல் மும்பையில் தொடங்கியுள்ளது.
சர்வதேச அளவில் கிரிக்கெட் வீரர்களை ஏலம் விடுவது இதுவே முதல் முறையாகும். பல கோடி ரூபாய் அளவுக்கு ஒவ்வொரு வீரரும் ஏலம் விடப்படவுள்ளனர்.
ரிச்சர்ட் மேட்லி நிறுவனம் வீரர்களை ஏலம் விடும் பணியை நடத்தவுள்ளது.
இந்த ஏலத்தில் சச்சின் டெண்டுல்கர், செளரவ் கங்குலி, ராகுல் டிராவிட், யுவராஜ் சிங், வீரேந்திர ஷேவாக் ஆகியோர் இடம் பெற மாட்டார்கள். இவர்களை ஐகான் வீரர்களாக ஐபிஎல் அறிவித்துள்ளது. இவர்கள் தங்களது சொந்த ஊர் அணிகளில் இடம் பெறுவார்கள். அந்த அணியில் இடம்பெறும் அதிக சம்பளம் பெறும் வீரரை விட இவர்களுக்கு 15 சதவீதம் கூடுதல் தொகை தரப்படும்.
கில்கிறைஸ்ட், ஷான் வார்னே, டோணி, அனில் கும்ப்ளே போன்ற வீரர்கள் முதலில் ஏலம் விடப்படவுள்ளனர்.
இன்றைய ஏலத்தில், கில்கிறைஸ்ட், டோணி, ரிக்கி பான்டிங் போன்ற நட்சத்திர வீரர்களுக்கு அதிக டிமாண்ட் நிலவுகிறது. கிட்டத்தட்ட 8 அணிகளுமே இவர்களை ஏலத்தில் எடுக்க முனைப்புடன் உள்ளன என்பதால் இந்த ஏலம் பெரும் ஆர்வத்தை தூண்டியுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications