ஜெயந்திரர் மீதான வழக்கில் மார்ச் 24 முதல் சாட்சிகள் விசாரணை

சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் 6 ஆண்டுகளுக்கு முன் தாக்கப்பட்டார். இது தொடர்பாக ஜெயேந்திரர், விஜயேந்திரரின் தம்பி ரகு, மடத்தின் மேனேஜர் சுந்தரேச அய்யர், தாதா அப்பு, காண்டிராக்டர் ரவி சுப்பிரமணியம் உள்பட 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதில் ரவி சுப்பிரமணியம் அப்ரூவராக மாறிவிட்டார்.
எனவே, ஜெயேந்திரர் உள்பட 11 பேர் மீது மட்டும் சென்னை முதலாவது கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக சிறப்பு அரசு வழக்கறிஞர் நியமிக்கப்படவில்லை. இதற்காக நீதிமன்றம் அரசுக்கு காலக்கெடு வழங்கியது. இந்த கெடுவும் முடியும் தருவாயில் நேற்று இந்த வழக்கு நீதிபதி முகமது இசாத் அலி முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஜெயேந்திரரை தவிர மற்றவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராயினர்.
அப்போது சிறப்பு வழக்கறிஞரை நியமிக்க கால அவகாசம் கேட்டு அரசு தரப்பில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இந்த மனுவை ஏற்க மறுத்த நீதிபதி அதை தள்ளுபடி செய்தார்.
மேலும் வழக்கு விசாரணையை அடுத்த மாதம் (மார்ச்) 24ம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதி அன்றையதினம் சாட்சிகள் விசாரணை தொடங்கும் என்றும் அறிவித்தார். இதற்காக சாட்சிகளுக்கு சம்மன் அனுப்பவும் உத்தரவிட்டார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications