போலீசாருடன் ரவுடி கட்டிப்புரண்டு 'கும்மாங்குத்து'!
தென்காசி: தென்காசி அருகே கோவில் பொருட்களை சேதப்படுத்திய குற்றத்திற்காக ரவுடியைப் பிடிக்க போலீஸார் முயன்றபோது, அவர்களுடன் அந்த ரவுடி கட்டிப் புரண்டு சண்டை போட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
தென்காசி அருகே உள்ள வடகரை சுடலை மாடசாமி கோயிலில் கடந்த 2 வாரத்திற்கு முன் பீடங்களை சேதப்படுத்தி பூஜை பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.
இதுகுறித்து அச்சன்புதூர் சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் விசாரனை நடததி வந்தார்.
இந்த நிலையில் கோயிலில் திருடியது பண்பொழி அருகே உள்ள கரிசல்குடியிருப்பை சேர்ந்த கந்தசாமி என்பது தெரியவந்தது. போலீசார் அவரை பிடிக்க முயன்றபோது அவர் குருவாயூருக்கு தப்பியோடி விட்டார்.
இந்நிலையில் அவர் கரிசல்குடியிருப்பில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று அவரை பிடிக்க முயன்றனர். அப்போது அவர் தப்பியோடி முயன்றதால் போலீசாரும் அவரும் கீழே விழுந்து தள்ளுமுள்ளு ஏற்பட்டு போலீசாருடன் கட்டி புரண்டார் கந்தசாமி.
இதனால் அதிர்ச்சி அடைந்த போலீஸார் பின்னர் சுதாரித்துக் கொண்டு கந்தசாமியை அமுக்குப் பிடித்து கைது செய்தனர்.
விசாரணையில் கந்தசாமி கோயிலில் கொள்ளையடித்த பொருட்களை வீட்டிலுள்ள பூஜை அறையில் பதுக்கி வைத்திருப்பதும் இது குறித்து யாராவது போலீசுக்கு தகவல் கொடுத்தால் மந்திரம் போட்டு கொன்று விடுவதாக மிரட்டியதும் தெரிய வந்தது.
ஏற்கனவே கந்தசாமி ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications