நிலையங்கள் மாறிய ரயில்கள்-ஓடித் தவித்த பயணிகள்

சென்னை பேசின் பிரிட்ஜ் ரயில் நிறுத்தத்தில் சிக்னல்களை மாற்றும் பணி நடந்து வருகிறது. வரும் 24ம் தேதி வரை இந்தப் பணிகள் நடக்கவுள்ளன. இதனால் சென்ட்ரல் மற்றும் மூர் மார்க்கெட் ரயில் நிலையங்களில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பல ரயில்கள் எழும்பூருக்கும், சில ரயில்கள் கடற்கரை ரயில் நிலையத்திற்கும் மாற்றப்பட்டுள்ளன.
எழும்பூரிலிருந்து 12 மெயில்கள் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களும், 25 வாராந்திர ரயில்களும் மாற்றப்பட்டு இயக்கப்படுகின்றன. இதுதவிர கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து 20 மின்சார ரயில்களும் இயக்கப்படுகின்றன.
இதுகுறித்து பத்திரிகைகளுக்கு தெரிவித்ததோடு ரயில்வே தனது கடமையை முடித்துக் கொண்டது. ஆனால் சம்பந்தப்பட்ட ரயில் நிலையங்களில் இதுதொடர்பாக எந்த அறிவிப்பும் வைக்கப்படவில்லை. இதனால் பயணிகள் பெரும் குழப்பத்தில் மூழ்கியுள்ளனர்.
இந் நிலையில் நேற்று காலை சென்டிரல் புறநகர் ரயில் நிலையத்திலிருந்து சூலூர்பேட்டைக்குச் செல்லும் மின்சார ரயில் 12வது பிளாட்பாரத்தில் புறப்படத் தயாராக இருந்தது. ஆனால் அதே நேரத்தில் அதே பிளாட்பாரத்திலிருந்து திருவள்ளூர் செல்லும் ரயிலும் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. இதனால் இரு ரயில்களும் மோதும் அபாயம் ஏற்பட்டது.
திருவள்ளூர் ரயிலின் என்ஜின் டிரைவர் சுதாரிப்புடன் செயல்பட்டதால் ரயில் நிறுத்தப்பட்டு வேறு பிளாட்பாரத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.
இந் நிலையில் ஆவடியிலிருந்து வரும் மின்சார ரயில்கள், , கும்மிடிப்பூண்டியில் இருந்து வரும் மின்சார ரயில்கள் எல்லாம் பேசின்பிரிட்ஜ் வரை இயக்கப்பட்டன.
அதே நேரத்தில் கடற்கரையில் இருந்து ஆவடி, கும்மிடிப்பூண்டிக்கு ரயில்கள் இயக்கப்பட்டன. இதன் காரணமாக பயணிகளுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டது.
சென்ட்ரலில் இருந்து பெங்களூர், விஜயவாடா போன்ற இடங்களுக்கு புறப்பட்டு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் எழும்பூரில் இருந்து புறப்படுவது தெரியாததால் பல பயணிகள் கடைசி நேரத்தில் அடித்துப் பிடித்து எழும்பூருக்கு ஓடினர்.
பெங்களூர் எக்ஸ்பிரஸ், கோவை இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் விஜயவாடா பினாங்கினி எக்ஸ்பிரஸ் போன்ற ரயில்கள் எழும்பூரில் இருந்து புறப்பட்டு சென்றன. இந்த ரெயில்களில் வழக்கத்துக்கு மாறாக கூட்டம் குறைவாகவே இருந்தது. காரணம் ரயில் எங்கிருந்து புறப்படுகிறது என்பது தெரியாமல் பயணிகள் குழம்பி ரயிலை விட்டதுதான்.
ரயில்கள் செல்லும் நேரம், எங்கிருந்து புறப்படுகிறது என்பதை தெளிவாக குறிப்பிடும் அறிவிப்புப் பலகைகளை ரயில்வே நிர்வாகம் வைத்தால் என்ன குறைந்து போய் விடும் என பயணிகள் குமுறுகின்றனர்.
-
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
ஐஆர்சிடிசி கேண்டீன்களில் ஏஐ கேமரா.. ரயில்களில் உணவு சாப்பிடுபவர்கள் அறிய வேண்டியவை -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்!












Click it and Unblock the Notifications