கட்டாய தமிழ்-லாலுவால் எதிர்க்க முடியுமா: தாக்கரே சவால்

தமிழகத்தில் பள்ளிகளில் தமிழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டியுள்ள தாக்கரே, அதை லாலுவால் எதிர்க்க முடியுமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
உத்தரபிரதேசம், பீகார் உள்ளிட்ட வட மாநிலத்தவருக்கு எதிராக வன்முறையை தூண்டிவிட்ட மகாராஷ்டிர நவநிர்மாண சேனா தலைவர் ராஜ் தாக்கரேவுக்கும் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவுக்கும் இடையே மோதல் தீவிரமாகி வருகிறது.
வட மாநிலத்தவர்கள் நடத்தும் சூரிய பூஜையை ராஜ் தாக்கரே வீட்டின் எதிரே நடத்தப் போவதாகவும், அதை ராஜ் தடுக்க முடிந்தால் தடுக்கலாம் என்றும் சவால் விட்டுள்ளார் லாலு.
இதற்கு சிவசேனா தலைவர் பால் தாக்கரே கண்டனம் தெரிவித்துள்ளதோடு லாலுவுக்கு புதிய சவாலும் விடுத்துள்ளார்.
இதுகுறித்து சிவ சேனாவின் சாம்னா பத்திரி்க்கையில் அவர் எழுதியிருப்பதாவது:
பீகார் மாநிலத்தை நரகம் ஆக்கிய லாலு பிரசாத் ராஜ் தாக்கரேக்கு விட்டுள்ள சவாலில் மும்பைக்கு வந்து சூரிய வழிபாடு பூஜை நடத்தப் போவதாக கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்களில் தமிழை கட்டாயமாக்கி அந்த மாநில அரசு சட்டம் கொண்டு வந்து உள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் லாலு பிரசாத் பீகார்வாசிகளை சென்னைக்கு அழைத்துச் சென்று அங்குள்ள மெரினா கடற்கரையில் சூரிய வழிபாடு பூஜை நடத்த வேண்டும்.
மத்திய அரசில் இடம் பெற்றுள்ள அவரது கூட்டணி கட்சிதான் தமிழ்நாட்டில் ஆட்சி நடத்துகிறது. இதை லாலு பிரசாத் இதை செய்வாரா?
மும்பை மாநகராட்சி நடவடிக்கைகளில் இந்தியை பயன்படுத்த வேண்டும் என்று மும்பையில் உள்ள சில வட இந்திய காங்கிரஸ் தலைவர்கள் கூறியுள்ளனர். அவர்கள் முதலில் இந்த முயற்சியை சென்னை, பெங்களூர், ஐதராபாத், கொல்கத்தா, கெளஹாத்தி ஆகிய நகரங்களில் மேற்கொள்ளட்டும்.
மராத்தி மொழியையோ மும்பை நகரையோ அவமதிக்கும் எந்த நடவடிக்கையையும் மராட்டிய மண்ணின் மைந்தர்கள் சகித்துக் கொள்ளமாட்டார்கள். மும்பை மாநகராட்சியில் இந்தியை திணிக்குமாறு கோரிக்கை விடுக்கும் காங்கிரஸ் தலைவர்கள் மீது மராட்டிய மாநில அரசு வழக்கு தொடர்ந்து அவர்களை சிறையில் தள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் பால் தாக்கரே.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications