தலித் மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை-நிபந்தனை ரத்து

முதல்வர் கருணாநிதியின் கோரிக்கையை ஏற்று இந்த நிபந்தனை வாபஸ் பெறப்பட்டதாக மத்திய அமைச்சர் மீரா குமார் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் மத்திய அரசின் சமூக நலத்துறை ஒரு உத்தரவைப் பிறப்பித்தது. அதன்படி, பிளஸ்டூவில் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றால்தான், தாழ்த்தப்பட்ட பழங்குடியின மாணவர்களுக்கு மேல் படிப்பில் கல்வி உதவித் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தமிழகத்தில் மாணவர்கள் பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தினர்.
இதையடுத்து மாணவர்களுக்கு தற்போது வழங்கப்படும் பழைய விதிமுறைப்படியே கல்வி உதவித் தொகை வழங்கப்படும் என முதல்வர் கருணாநிதி தெளிவுபடுத்தினார். அத்தோடு நில்லாமல், பழைய விதிமுறைப்படியே கல்வி உதவித் தொகை வழங்கப்பட வேண்டும், புதிய நிபந்தனையைக் கைவிட வேண்டும் என்று கோரி சமூக நலத்துறை அமைச்சர் மீரா குமாருக்கு கடிதம் எழுதினார்.
இந்த நிலையில் நேற்று கூடிய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தப் புதிய நிபந்தனையைக் கைவிட தீர்மானிக்கப்பட்டது.
இந்த முடிவை அமைச்சர் மீரா குமார் நேற்று முதல்வர் கருணாநிதியிடம் தொலைபேசி மூலம் தெரிவித்தார். கருணாநிதியின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக மீரா தெரிவித்தார்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications