டெபாசிட் இழந்த 'கருப்பு எம்.ஜி.ஆர்.' - கருணாநிதி
சென்னை: உள்ளாட்சி இடைத் தேர்தலில் விஜயகாந்த்தின் தேமுதிக தோல்வி அடைந்தது குறித்து முதல்வர் கருணாநிதி கவிதை பாடியுள்ளார்.
இதுகுறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள கவிதை:
ஆர்ப்பாட்டமென்ன, போர்ப்பாட்டு என்ன;
"சார்பட்டா" பரம்பரையென்ற சவுக்கடி பேச்சுத்தான் என்ன, என்ன?
வேர்பட்டுப் பிறக்கின்ற பூமியிலே மழை
நீர்பட்டு முளைக்கின்ற காளான் போலே
ஒரு கட்சி உதிக்கும் மறு கட்சி பிறப்பதற்குள்!
இரு கட்சி இருள் போக்குமென்று இங்குள்ள ஏடெல்லாம்
திருவிழா தினந்தோறும் நடத்திப் பார்த்து; ஏமாந்த காரணத்தால்
இரு விழி மூடிக் கொண்ட குருடுகளாய் ஆகி விட்டார்!
நல்லாட்சி நடக்கும் தமிழகத்தில்
உள்ளாட்சி இடைத் தேர்தல் நடந்ததம்மா!
நடிகர் இருவர் ஆட்சியிலே: நாடு வரப் போகின்றதென்று;
நடுநிலை ஏடுகள் கூட நம் மீது கெடு மதி கொண்டு சீறி
நன்மையெது தீமையெது என்பதறியாது அறவழிகள் மீறி
உண்மையைப் பொய்யென்றும், பொய்யைப் புனிதமென்றும்
வெளியிட்டார் செய்திகளை: அவையனைத்தும்
ஒளிபட்ட இருளைப் போல் ஓடி ஒளிந்ததம்மா!
நூற்றுக்கு ஒரு விழுக்காடு இடம் கூட இவர் தம் பொய்க்
கூற்றுக்கு செவி சாய்த்து வெற்றியெனக் கிடைக்கவில்லை!
கருப்பு நிற எம்.ஜி.ஆர். என்றும், கர்ம வீரர் தொண்டர் (சரத்குமார்) என்றும் கர்ச்சித்தோர்
கட்டுத் தொகையைக் கூட இழந்து நிற்கும் பரிதாபத்தை என்ன சொல்ல?
எறும்புத் தலைகளை இமய மலைகளாய் வர்ணித்த இதழாளர்களே;
கரும்பிலும் இனிய செய்தியாய் கழகக் கூட்டணியன்றோ
பெரு வெற்றி ஈட்டியது இன்று!
அன்பு உடன்பிறப்புக்காள், அதற்குள் துள்ளிக் குதிக்காமல்
அடுத்து வரும் வெற்றிகட்கு இது அச்சாரமென அயராது உழைத்திடுக!
இவ்வாறு கவிதையில் கூறியுள்ளார் கருணாநிதி.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது!












Click it and Unblock the Notifications