பட்டப்பகலில் பட்டாக் கத்தியை காட்டி ரூ.18 லட்சம் வழிப்பறி!
மதுரை: மதுரையில் பட்டப்பகலில் பட்டாக்கத்தியை காட்டி ரூ 18 லட்சத்தை பறித்துச் சென்றது கொள்ளைக் கும்பல்.
மதுரை பாண்டி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த நாகராஜன் மேட்டு கம்மாளத் தெருவில் நகைப் பட்டறை நடத்தி வருகிறார்.
இவரிடம் கடந்த பத்து ஆண்டுகளாக ரவிக்குமார் என்பவர் வேலை செய்து வருகிறார். ஆர்டர் கொடுத்த நகைகளை கடைக்கு எடுத்து செல்லவதும், வடிவமைத்த நகைகளை வீட்டிற்கு கொண்டு வந்து தருவதும் ரவிக்குமார் தான்.
நேற்று வழக்கம் போல் ஒன்னறை கிலோ தங்க நகைகள் மற்றும் 85 ஆயிரம் ரூபாயை ஒரு பையில் பேட்டு எடுத்துக் கொண்டு சைக்கிளில் நகை பட்டறைகக்கு சென்றார். அப்போது இரண்டு மேட்டார் சைக்கிள்களில் வந்த கும்பல் ரவிக்குமாரை வழிமறித்தது.
பட்டாக் கத்தியை காட்டி மிரட்டிவிட்டு நகை மற்றும் பணத்தை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் மறைந்தனர்.
இது குறித்து தெற்கு வாசல் காவல் நிலையத்தில் ரவிக்குமார் புகார் கொடுத்தார்.
கொள்ளையர்கள் கொள்ளையடித்த நகைகள், மற்றும் பணத்தின் மதிப்பு ரூ. 18 லட்சம் ஆகும். இச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.