கருங்கடலில் கப்பல் மூழ்கியது-25 இந்தியர்கள் பலி?

பனாமா நாட்டுக்குச் சொந்தமான எம்.வி. ரெஸாக் என்ற கப்பல் ரஷ்யாவிலிருந்து இரும்புத் துண்டுகளை ஏற்றிக் கொண்ட துருக்கி கிளம்பியது. கடந்த 18ம் தேதி இக்கப்பல் துருக்கி, கருங்கடல் பகுதியில் வந்தபோது காணாமல் போய் விட்டது.
இதையடுத்து கப்பலைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. இதுவரை கப்பல் கண்டுபிடிக்கப்படவில்லை. மேலும், கப்பலில் இருந்தவர்கள் கதி என்ன என்றும் தெரியவில்லை.
கருங்கடல் பகுதி கடும் குளிரான பகுதியாகும், எனவே நீரில் மூழ்கியவர்களால் அரை மணி நேரத்திற்கு மேல் உயிரோடு இருக்க முடியாது என்று கூறப்படுகிறது. எனவே கப்பலில் இருந்தவர்கள் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
இக்கப்பலில் 25 பேர் இந்தியர்கள் ஆவர். இவர்களும் உயிரிழந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. 25 பேரில் தூத்துக்குடியைச் சேர்ந்த ஆலந்தாழை கிராமத்தைச் சேர்ந்த அந்தோணி அலங்காரன் பியோ (38), பெரியதாழையைச் சேர்ந்த சேசு மெஸ்லர் (26) ஆகியோர் உள்பட 3 பேர் தூத்துக்குடியைச் சேர்ந்தவர்கள்.
காணாமல் போய் விட்ட பனாமா கப்பல் மிகவும் மோசமான நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. 25 ஆண்டு பழமை வாய்ந்த அந்தக் கப்பல் மோசமான நிலையில் இருந்ததால்தான் விபத்து ஏற்பட்டதாக பனாமா கப்பல் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications