தர்மபுரி போலீஸாருக்கு இன்று 'நார்கோ' சோதனை
பெங்களூர்: தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் துப்பாக்கிகள் காணாமல் போனது தொடர்பாக சந்தேக வலையில் சிக்கியுள்ள 8 போலீஸாருக்கு இன்று பெங்களூரில் உண்மை கண்டறியும் (நார்கோ அனாலிசிஸ்) சோதனை நடைபெறுகிறது.
அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த 6 துப்பாக்கிகள், ஒரு வாக்கி டாக்கி ஆகியவை கடந்த 8ம் தேதி காணாமல் போயின. முதலில் நக்சலைட்டுகள்தான் இதற்குக் காரணம் என கூறப்பட்டது.
பின்னர் போலீஸார் மீது சந்தேகம் எழுந்தது. இந்த நிலையில் காவல் நிலையத்திற்குப் பின்புறம் உள்ள வாழைத் தோப்பில் புதைக்கப்பட்ட நிலையில், 5 துப்பாக்கிகள் மீட்கப்பட்டன. இதையடுத்து போலீஸார் மீதான சந்தேகம் மேலும் வலுத்தது.
இதையடுத்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட சப் இன்ஸ்பெக்டர் உள்பட 8 காவலர்களுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்கள் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டனர்.
சென்னையில் உள்ள மன நல மருத்துவக் கழகத்தில் அவர்களுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடைபெறுவதாக இருந்தது. ஆனால் திடீரென 8 பேரும் மீண்டும் தர்மபுரிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று 8 பேரும் பெங்களூர் கொண்டு வரப்பட்டனர். இன்று அவர்களுக்கு நிமான்ஸ் மருத்துவமனையில் நார்கோ அனாலிசிஸ் எனப்படும் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்படவுள்ளது. இந்த சோதனைக்காக தமிழக காவல்துறை ரூ. 80 ஆயிரம் கட்டணம் செலுத்தியுள்ளதாம்.
இன்றைய உண்மை கண்டறியும் சோதனையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications