சென்ட்ரலில் பிரச்சனை-ரயில்கள் ரத்து, நேரம் மாற்றம்

இதனால் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் ரயில்களின் நேரங்கள் மாற்றப்பட்டுள்ளன.
சென்னையிலிருந்து ஜெய்ப்பூர் செல்லும் ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று மாலை பேசின்பிரிட்ஜ் தளத்திலிருந்து சென்டிரல் ரயில் நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டது. அப்போது ரயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டன.
தடம் புரண்ட பெட்டிகள், மின் கம்பத்தின் மோதியதில் அது சாய்ந்து விட்டது. இதனால் மின்சாரம் தடைபட்டு ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தடம் புரண்ட பெட்டிகளை மீட்கவும், மின்சார கம்பத்தை சரி செய்யும் பணியிலும் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்த விபத்து காரணமாக சென்னை சென்டிரலுக்கு வர வேண்டிய பல வெளியூர் எக்ஸ்பிரஸ் ரயில்கள் வர முடியாமல் எழும்பூருக்கு திருப்பி விடப்பட்டன. நீலகிரி எக்ஸ்பிரஸ், சதாப்தி எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
ரயில்கள் வராததாலும், ரத்து செய்யப்பட்டதாலும் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். சென்டிரல் ரயில் நிலையத்திற்கு வந்திருந்த ஆயிரக்கணக்கான பயணிகளுக்கும் ரயில்கள் ரத்து குறித்தோ அல்லது எழும்பூருக்கு மாற்றப்பட்டது குறித்தோ முதலில் சரிவரத் தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.
கடைசி நேரத்தில் எழும்பூருக்கு ரயில்கள் சில மாற்றப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து பயணிகள் அடித்துப் பிடித்துக் கொண்டு எழும்பூருக்கு விரைந்தனர்.
விடிய விடிய ரயில் பாதை சீராகவில்லை. இன்று காலையில்தான் மின் கம்பங்கள் சரி செய்யப்பட்டு நிலைமை சீரடைந்து வருகிறது.
ரயி்ல்கள் ரத்து:
இந் நிலையில் தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று பிற்பகல் 1.30க்கு ரகிளம்ப வேண்டிய திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயிலும், திருப்பதியிலிருந்து சென்னை வரும் ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
நாகர்கோவில்-சென்னை வாரந்திர எக்ஸ்பிரஸ் ரயில் அரக்கோணத்துடன் நிறுத்தப்படுகிறது.
பாட்னா-பெங்களூர் சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் பகல் 2 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது. பெங்களூர்-பாட்னா எக்ஸ்பிரஸ் 3.20க்கு மாற்றப்பட்டுள்ளது. இவை இரண்டும் பெரம்பூரிலிருந்து கிளம்பும். எனவே பயணிகள் பெரம்பூரில் சென்று இந்த ரயில்களில் ஏறலாம்.
இது தவிர சென்னை சென்ட்ரலுக்கு வரும் மேலும் 4 ரயில்களும் எழும்பூருக்கு மாற்றிவிடப்பட்டுள்ளன.
அந்த ரயில்களின் விவரம்:
லால்பாக் எக்ஸ்பிரஸ், பெங்களூர் எக்ஸ்பிரஸ், கோவை-சென்னை இன்டர்சிட்டி, பினாகி எக்ஸ்பிரஸ். இவற்றின் நேரமும் மாற்றப்பட்டுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications