தாவூத்தைப் பிடிக்க முடியாது-இன்டர்போல்
மும்பை: சர்வதேச பயங்கரவாதி தாவூத் இப்ராகிமை, அவர் பதுங்கியிருக்கும் நாடே பிடித்துத் தந்தால்தான் உண்டு. எங்களால் பிடிக்க முடியாது, அதற்கான அதிகாரமும் எங்களுக்கு இல்லை என்று சர்வதேச போலீஸ் கூட்டமைப்பான இன்டர்போல் கைவிரித்து விட்டது.
சர்வதேச போலீஸான இன்டர்போல் அமைப்பின் பொதுச் செயலாளர் ரொனால்ட் நோபிள் மும்பை வந்துள்ளார். செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஒரு குற்றவாளியை எங்களிடம் ஒப்படைக்குமாறு எங்களால் எந்த நாட்டையும் கட்டாயப்படுத்த முடியாது.
தாவூத் இப்ராகிம் விவகாரத்திலும் இது பொருந்தும். அவர் எங்கு மறைந்திருக்கிறாரோ, அந்த நாட்டு அரசுதான் தாவூத்தைப் பிடித்து இன்டர்போலிடம் ஒப்படைக்க வேண்டும். அப்போதுதான் தாவூத்தை எங்களால் இந்தியாவிடம் ஒப்படைக்க முடியும்.
இன்டர்போல் அமைப்பில் உறுப்பினராக இருக்கும் நாடுகள்தான் தேடப்படும் குற்றவாளியை இன்டர்போலிடம் ஒப்படைக்க முன்வர வேண்டும். அல்லது தங்களது நாட்டில் வைத்தே அவர்களிடம் விசாரணை நடத்த வேண்டும்.
தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் இருக்கிறார் என்பதை நாங்கள் ஒத்துக் கொள்கிறோம். ஆனால் அவரை எங்களிடம் ஒப்படைப்பது குறித்து பாகிஸ்தான்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
-
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications