For Daily Alerts
Just In

சட்டவிரோத தங்கல்: இலங்கை தமிழர் கைது
திருச்சி: திருச்சி அருகே உரிய ஆவணங்கள் இந்றி தங்கியிருந்த இலங்கைத் தமிழர் கைது செய்யப்பட்டார்.
திருச்சி புறநகர்ப் பகுதியான எடமலைப்பட்டி புதூர் பகுதியில் இலங்கையைச் சேர்ந்த சுந்தரராசா என்கிற தியாகராசா என்கிற ஸ்ரீதர் (41) தங்கியிருந்தார்.
நேற்று இரவு இவர் சந்தேகத்திற்கிடமான வகையில் போய்க் கொண்டிருந்தார். இதையடுத்து அவரைத் தடுத்து போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது ஸ்ரீதரிடம், உரிய விசாவோ, பாஸ்போர்ட்டோ இல்லை என்பது தெரிய வந்தது.
கடந்த 1986ம் ஆண்டு ஸ்ரீதர் தமிழகம் வந்துள்ளார். அன்று முதல் எடமலைப்பட்டி புதூரில் தங்கியுள்ளார்.
முறையான ஆவணங்கள் அவரிடம் இல்லாததால் போலீஸார் ஸ்ரீதரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Comments
Story first published: Tuesday, February 26, 2008, 10:13 [IST]