2 தாலிகளுடன் வாழ்ந்த தங்கை கொலை-அண்ணன் கைது!!
தஞ்சாவூர்: 2 பேர் கட்டிய தாலியுடன் வாழ்ந்த தங்கையை அவரது அண்ணனே வெட்டிக் கொலை செய்தார்.
தஞ்சாவூரைச் சேர்ந்த உமாராணி ( 35) என்ற விதவைப் பெண் திருக்காட்டுப்பள்ளி அருகே கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
இவரது கணவர் சாமிநாதன் பொதுப்பணித்துறை பொறியாளராக பணிபுரிந்தவர். அவர் இறந்த பின் உமாராணி வட்டிக்கு பணம் கொடுத்து வந்தார். இந் நிலையில் அவர் உமாராணி கொலையாகிக் கிடந்தார்.
போலீஸ் விசாரணையில் உமா ராணியை அவரது சொந்த அண்ணன் சரவணனே கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து சரவணனை போலீஸார் கைது செய்தனர்.
கொலை குறித்து சரவணன் போலீஸாரிடம் கூறுகையில்,
உமாராணிக்கும் சாமிநாதனுக்கும் 12 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. அவர்களுக்கு சுஷ்மிதா, சுபலட்சுமி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.
இந் நிலையில் உமாராணிக்கும், வேறு ஒரு நபருக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. அவரும், உமாராணியின் கழுத்தில் தாலி கட்டினார். இதனால் மனம் உடைந்த சாமிநாதன் குடிப்பழக்கத்தை நாடி அதற்கு அடிமையாகி விட்டார்.
இதனால் உடல் நலம் கெட்டு இறந்து போனார். அவரது மரணத்தின்போதுதான் எங்களுக்கு உமாராணி 2 தாலியுடன் வாழ்ந்து வந்தது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்து உமாராணியைக் கண்டித்தோம். ஆனால் அவர் எங்களது பேச்சைக் கேட்கவில்லை.
இதனால் நானும் உறவினரான ராஜாவும் சேர்ந்து உமாராணியை வெட்டிக் கொலை செய்தோம் என்று கூறியுள்ளார் சரவணன்.
இதையடுத்து ராஜாவையும் போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications