நாடாளுமன்றத்தில் இன்றும் அமளி-ஒத்திவைப்பு
டெல்லி: விவசாயிகள் பிரச்சினையை வலியுறுத்தி இன்றும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் நண்பகல் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டன.
ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக நேற்று நாடாளுமன்றம் கூடியது. லோக்சபா கூடியதுமே விவசாயிகள் தற்கொலை பிரச்சினையை விவாதிக்க கேள்வி நேரத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரி தேசிய ஜனநாயகக் கட்சி எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை ஒத்திவைக்கப்பட்டு பின்னர் நண்பகல் 12 மணிக்கு மேல் ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
பட்ஜெட் தாக்கலின்போது பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த எம்.பிக்கள் தங்களது மாநிலம் புறக்கணிக்கப்பட்டதாக கூறி அமளியில் ஈடுபட்டன. இதனால் மாலை 3 மணிக்கு லோக்சபா ஒத்திவைக்கப்பட்டது. இதேபோல ராஜ்யசபாவிலும் அமளி நிலவியது.
இந்த நிலையில் இன்றும் இரு அவைகளிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இன்று காலை 11 மணிக்கு லோக்சபா கூடியதும் தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பிக்கள் விவசாயிகள் பிரச்சினை குறித்து விவாதிக்க கேள்வி நேரத்தை ஒத்திவைக்கக் கோரி அமளியில் ஈடுபட்டனர். அவர்களை அமைதிப்படுத்த முயன்று தோற்ற சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி நண்பகல் 12 மணி வரை அவையை ஒத்திவைத்தார்.
இதேபோல ராஜ்யசபாவிலும் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் ராஜ்யசபாவும் நண்பகல் 12 வரை ஒத்திவைக்கப்பட்டது.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
டெல்லியில் பயங்கரம்! முதலில் பேஸ்மென்ட்டில் வெளியேறிய கரும்புகை! அடுத்த சில நிமிடங்களில் 20 பேர் பலி -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications