தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து- 5 பேர் பலி
வேலூர்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள புவனீஸ்வரிபேட்டை என்ற இடத்தில் இன்று காலை தீப்பெட்டித் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிருடன் கருகி பலியானார்கள்.
இன்று காலை 9.30 மணியளவில் அந்தத் தீப்பெட்டித் தொழிற்சாலையில் ஊழியர்கள் பணியில் இருந்தபோது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் பணியில் ஈடுபட்டிருந்த நான்கு தொழிலாளர்கள் உயிருடன் கருகினர்.
நான்கு பேரின் உடல்களும் அடையாளம் காண முடியாத அளவுக்கு கருகிப் போய் விட்டது.
தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து கடுமையாக போராடி தீயை அணைத்து நான்கு பேரின் உடல்களையும் மீட்டனர்.
தீப்பெட்டித் தொழிற்சாலை இருந்த கட்டடம் முழுவதும் தீயில் நாசமாகி தரைமட்டமாகி விட்டது.
பள்ளியில் தீ-வினாத்தாள்கள் சாம்பல்:
இதற்கிடையே வாசுதேவநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தால் மாணவர்களின் தேர்வு வினா தாள் மற்றும் விடை தாள்கள் எரிந்து நாசமானது.
வாசுதேவநல்லூர் தெற்கு ரத வீதியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 1,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இங்கு ஏற்பட்ட தீ விபத்தில் ஆசிரியர்கள் ஓய்வு எடுக்கும் அறையில் இருந்த பெஞ்சுகள், மற்றும் மாணவ, மாணவிகளின் வினா மற்றும் விடை தாள்கள் எரிந்து சாம்பலாயின.
மின் கசிவால் இந்த விபத்து ஏற்பட்டதாகத் தெரிய வந்துள்ளது.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்! -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications