ரயில்வே பட்ஜெட்-கருணாநிதி வரவேற்பு, திருப்தி

ரயில்வே பட்ஜெட் குறித்து முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை
அனைத்துத் தரப்பு மக்களுக்கும் அனைத்து வகையிலும் மன நிறைவு அளிக்கும் ஒரு சிறந்த ரயில்வே பட்ஜெட்டை அளித்துள்ள ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத்தை பாராட்டுகிறேன்.
குறிப்பாக சாமானிய மக்கள் பயணம் செய்யும் 2ம் வகுப்பு கட்டணத்தை 5 சதவீதமாக குறைத்திருப்பது பாராட்டுக்குரியது.
தமிழகத்தைப் பொறுத்தவரையில், நமது மாநிலத்தின் நீண்ட நாள் கோரிக்கையான விழுப்புரம் திண்டுக்கல் ரயில் பாதையை இரு வழித்தடமாக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் மதுரை - போடி அகலப் பாதைத் திட்டம், ஈரோடு-பழனி, சென்னை-புதுச்சேரி-கடலூர் ஆகிய புதிய ரயில் திட்டங்கள், திருவள்ளூர்-அரக்கோணம் நான்காவது வழித்தடத் திட்டங்களும் இந்த ரயில்வே பட்ஜெட்டில் இடம் பெற்றிருப்பது தமிழக மக்களுக்குக் கிடைத்துள்ள நன்மைகளாகும்.
அத்திப்பட்டிலிருந்து புத்தூர் வரை ஒரு புதிய வழித்தடத்தை அறிவித்திருப்பது எண்ணூர் துறைமுகத்திற்கு நன்மை.
பெரம்பூர் லோகோ பணிமனையை நவீனப்படுத்தும் திட்டத்ைத அறிவித்திருப்பது மகிழ்ச்சி. தமிழகத்துக்கு 8 புதிய ரயில்களையும், 4 ரயில்களை நீட்டித்தும் அறிவித்திருப்பது பாராட்டுக்குரியது.
நாகப்பட்டனம்-வேளாங்கண்ணி புதிய ரயில் பாதைப் பணிகள் இந்த ஆண்டு முடிக்கப்படும் என்ற அறிவிப்பும், காரைக்குடி, மானாமதுரை திருவாரூர்-நாகூர் ஆகிய ரயில் வழித் தடங்களை அகலப் பாதையாக மாற்றும் பணிகளும் வரும் நிதியாண்டில் முடிக்கப்படும் என்ற அறிவிப்பும், இந்தப் பணிகளுக்குப் பின் சேலம், கடலூர், திருச்சி, மானாமதுரை ஆகிய வழித் தடங்களை அகலப் பாதையாக மாற்றும் பணிகளும் திருவண்ணாமலை, விழுப்புரம் வழித்தடத்தை அகலப் பாதையாக்கும் திட்டமும் மேற்கொள்ளப்பட்டு முடிக்கப்படும் என்பதும் வரவேற்கத்தக்கன.
சென்னை மாநகர விரைவு ரயில் திட்டத்தின் 3வது கட்டமாக, வேளச்சேரியிலிருந்து புனித தோமையர் மலை வரையிலான திட்டம், ரூ. 496 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு 2010 டிசம்பர் மாதத்திற்குள் நிறைவேற்றப்படும் என்ற அறிவிப்பு சென்னை மக்களுக்கு இனிய செய்தி.
காரைக்குடி- ராமநாதபுரம்-தூத்துக்குடி, கன்னியாகுமரி ரயில் பாதை, சிதம்பரம்-பெரம்பலூர்-ஆத்தூர்-தஞ்சாவூர்-அரியலூர் ஆகிய புதிய ரயில் பாதைகள் அமைப்பது குறித்தும், ஓமலூர், மேட்டூர் வழித் தடத்தை இரட்டிப்பாக்கும் திட்டம் குறித்தும் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்பதும் வரவேற்க்கத்தக்க அம்சங்கள் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு












Click it and Unblock the Notifications