சென்னை அணியின் பயிற்சியாளர் கெப்ளர் வெஸல்ஸ்

உலக கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய இரு அணிகளுக்காக விளையாடிய ஒரே வீரர் வெஸ்ஸல்ஸ். இனவெறி காரணமாக தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டிருந்தது.
பின்னர் தடை விலக்கப்பட்ட பின்னர் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக வெஸ்ஸல்ஸ் நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் படு வேகமாக சர்வதேச அரங்கில் தென் ஆப்பிரிக்க அணி பல வெற்றிகளைக் குவித்தது.
50 வயதாகும் வெஸ்ஸல்ஸ் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஒரு வருட ஒப்பந்தத்தின் கீழ் அவர் பயிற்சியாளராகியுள்ளார்.
மார்ச் 20ம் தேதி அவர் அணியில் இணைந்து கொள்வார். இத்தகவலை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கிரிக்கெட் விவகாரத் தலைவரும், முன்னாள் தேசியத் தேர்வாளருமான வி.பி.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்காக விளையாடியுள்ள வெஸ்ஸல்ஸ், இரு அணிகளுக்காகவும் சிறப்பாக விளையாடியுள்ளார். முன்னாள் இந்திய வீரரும், தற்போது கிரிக்கெட் வர்னணையாளராக பணியாற்றி வருபவருமான முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் எல். சிவராமகிருஷ்ணன்தான், வெஸ்ஸல்ஸை சென்னைக்கு கொண்டு வர தீவிரமாக முயன்றவர்.
கடந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக நியமிக்க வெஸ்ஸல்ஸை இந்திய கிரிக்கெட் வாரியம் நாடியது. இருப்பினும் அது கைகூடவில்லை. இந்த நிலையில் சென்னைக்கு அணிக்கு அந்த பாக்கியம் கிடைத்துள்ளது.
சென்னை அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளது குறித்து வெஸ்ஸல்ஸ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். சென்னை அணியின் இளம் வீரர்களை சிறப்பான நிலைக்குக் கொண்டு வர உழைக்கப் போவதாக வெஸ்ஸல்ஸ் தெரிவித்துள்ளார்.
இதில் விசேஷமான விஷயம் என்னவென்றால், ஆஸ்திரேலிய அணி வீரரும், சென்னை அணியில் இடம்பெற்றுள்ளவருமான மாத்யூ ஹெய்டன், வெஸ்ஸல்ஸுடன் ஆஸ்திரேலியாவில் பல போட்டிகளில் ஆடியவர். இப்போது ஹெய்டன் இடம் பெற்றுள்ள சென்னை அணிக்குப் பயிற்சியாளராக வருவது குறித்து வெஸ்ஸல்ஸ் இரட்டிப்பு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
-
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
IPL 2026: அடேங்கப்பா..! ஐபிஎல் பரிசுத்தொகை எவ்வளவு? வைபவ் சூர்யவன்ஷி காட்டில் கொட்டிய பணமழை! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வைபவ் சூர்யவன்ஷிக்கு சச்சின் கொடுத்த 'சர்டிபிகேட்'! இளம் புயலின் பேட்டிங் ரகசியத்தை உடைத்த மாஸ்டர்! -
வாள் தூக்கி நின்ற வெங்கடேஷ் ஐயர்.. ப்ளே ஆஃப் வந்தாலே ஆளை கையில் பிடிக்க முடியாது.. இம்பேக்ட் ஆட்டம்! -
"தல" தோனி, ரோஹித் வரிசையில் படிதார்.. சாம்பியன்ஷிப்பை விட பெரிய சாதனை படைத்த ஆர்சிபி.. கலக்கல்












Click it and Unblock the Notifications