மே.வங்கம், ஒரிஸ்ஸா, அஸ்ஸாமிடம் மின்சாரம் வாங்கும் தமிழகம்

இது குறித்து மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி அளித்த பேட்டி,
தமிழகத்திற்கு இன்றைய நிலவரப்படி தினமும் 8,900 மெகா வாட் மின்சாரம் தேவைப்படுகிறது. ஆனால் உற்பத்தி செய்யப்படுவது 8,600 மெகா வாட் தான். இதனால் 300 மெகா வாட் அளவுக்கு மின்சார பற்றாக்குறை இருந்து வருகிறது.
கோடை காலத்தில் மின்சார தேவையை சமாளிக்க மார்ச் முதல் வாரத்தில் இருந்து மேற்கு வங்காளம், ஒரிஸ்ஸா, அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் இருந்து 250 மெகாவாட் மின்சாரம் வாங்க திட்டமிட்டுள்ளோம்.
ஏப்ரல் மாதத்தில் 400 மெகா வாட் மின்சாரம் வாங்கவுள்ளோம். மே 15ம் தேதி முதல் மேலும் 500 வாட் மின்சாரம் தேவைப்படும்.
ராமநாதபுரம் மாவட்டம் வனத்தூர் என்ற இடத்தில் எரிவாயு அடிப்படையில் மின்சாரம் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதிலிருந்து 100 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும்.
மேலும் மே 15ம் தேதிக்கு பின் பருவ காலம் தொடங்கி விடுவதால் காற்றாலை மூலம் மின் உற்பத்தியும் தொடங்கி விடும். இதனால் மின்தடை ஏற்படாது.
நகர்கள் முதல் கிராமங்கள் வரை முழுவதும் பரவலாக 1 மணி நேரம் மின் நிறுத்தம் ஏற்படும். மாலை 6 மணிக்கு மேல் மின்சாரத்தை எவ்வித காரணம் கொண்டும் தடை செய்யக்கூடாது என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாணவர்கள் தேர்வுக்கு படிப்பதற்கு எந்த தடையும் இருக்கக்கூடாது என்பதற்காக இரவில் மின் நிறுத்தம் இருக்காது என்றார் வீராசாமி.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications