திமுக எம்.எல்.ஏ மருமகன் கார் மீது குண்டு வீச்சு
நெல்லை: திருநெல்வேலி தொகுதி திமுக எம்.எல்.ஏ. மாலைராஜா எம்எல்ஏ மருமகன் கார் மீது பைக்கில் வந்த மர்ம நபர்கள் குண்டு வீசி தாக்கினர். இதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
பாளையங்கோட்டை பெருமாள்புரத்தை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ராமசாமியின் மகன் ரகுராமையா. இவர் ஒரு வழக்கறிஞர். திமுக எம்எல்ஏ மாலைராஜாவின் மருமகன் ஆவார்.
நேற்று இரவு 8.30 மணியளவில் மாமனார் வீட்டுக்கு சுமோ காரில் ரகுராமையா சென்றார். காரை தச்சநல்லுரை சேர்ந்த துரைப்பாண்டி மகன் முத்துராஜ் ஓட்டினார்.
வண்ணார்பேட்டை பைபாஸ் ஆற்றுபாலம் அருகே சென்றபோது காரை பின் தொடர்ந்து இரு பைக்குகளில் வந்த மர்ம நபர்கள் காரில் இருந்தவர்கள் மீது வெடிகுண்டுகளை வீசினர்.
ஆனால் கார் டிரைவர் சாதுர்யமாக செயல்பட்டு காரை வேகமாக ஓட்டியதால் அவர்கள் காயமின்றி தப்பினர். குண்டு வீச்சில் கார் பேனட் பெரும் சேதம் அடைந்தது.
குண்டு வீச்சு குறித்து தகவல் அறிந்ததும் காவல்துறை ஆணையர் தினகரன், இன்ஸ்பெக்டர் நாகராஜன், ராஜ்குமார், மற்றும் நுண்ணறிவு, தடவியல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு செய்தனர். எம்எல்ஏ மாலைராஜாவும் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டார்.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ராகுராமையாவின் சகோதரி சவுமியா, ரமேஷ் என்ற டிரைவரைக் காதலித்து வந்தார். ரமேஷ் சமீபத்தில் சவுமியாவை பதிவுத் திருமணம் செய்து கொண்டார்.
இதுதொடர்பாக சவுமியாவை கடத்திச் சென்று விட்டார் ரமேஷ் என்று கூறி போலீஸில் புகார் செய்யப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே மோதல் இருந்து வந்தது. இதன் காரணமாக இந்த வெடிகுண்டு வீச்சு சம்பவம் நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இதுகுறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!











Click it and Unblock the Notifications