பிளஸ் டூ தேர்வுகள் துவங்கின
சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று (திங்கட்கிழமை) பிளஸ் டூ தேர்வுகள் தொடங்கின. வரும் 24ம் தேதி வரை இந்தத் தேர்வுகள் நடக்கின்றன.
இந்த ஆண்டு 6.6 லட்சம் மாணவ-மாணவிகள் பிளஸ் டூ தேர்வு எழுதுகின்றனர். இதற்காக தமிழகம் முழுவதும் 1,650 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்க அனைத்து மாவட்டங்களிலும் முதன்மை கல்வி அதிகாரி தலைமையில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதும் 9,000 பேர் இந்த பறக்கும் படைகளிடம் இடம் பெற்றுள்ளனர்.
காப்பி அடித்தல், ஆள் மாறாட்டம் செய்தல் ஆகிய செயல்களில் இறங்குவோர் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு வினாக்களை படிக்க தனியாக 10 நிமிட நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் 27ம் தேதி தொடங்குகின்றன.


Click it and Unblock the Notifications
