'டம்மி' குண்டுகளால் கோவிலில் பெரும் பீதி

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் கோவிலில், சினிமா ஷூட்டிங்கின்போது தவறுதலாக விடப்பட்ட 12 போலி குண்டுகளை போலீஸார் கண்டுபிடித்து மீட்டனர்.

திருவிடைமருதூரில் உள்ளது மகாலிங்கசாமி கோவில். இக்கோவிலில் இன்று காலை துப்புறவுத் தொழிலாளர்கள் கோவிலை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது ஒரு பிளாஸ்டிக் பெட்டி அங்கு கிடந்தது. அதில் வயர்களும், ஜெலட்டின் குச்சிகளும் இருப்பதைப் பார்த்த ஊழியர்கள் பீதியடைந்தனர்.

உடனடியாக போலீஸாருக்குத் தகவல் பறந்தது. போலீஸார் வெடிகுண்டு நிபுணர்களுடன் விரைந்து வந்தனர்.

வெடிகுண்டு நிபுணர்கள் அந்த மர்மப் பொருள் இருந்த பிளாஸ்டிக் பெட்டியை பரிசோதித்தனர். அப்போது அந்தப் பெட்டியில் 12 போலி வெடிகுண்டுகள் இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து போலீஸார் நடத்திய விசாரணையில், சமீபத்தில் அந்தக் கோவிலில் சிங்கக்குட்டி படத்தின் ஷூட்டிங் நடந்ததும், ஷூட்டிங்கில் கலந்து கொண்டவர்கள், தவறுதலாக இந்த போலி வெடிகுண்டு பெட்டியை விட்டு விட்டுச் சென்றதும் தெரிய வந்தது.

கண்டுபிடிக்கப்பட்டது போலி வெடிகுண்டுகள் எனத் தெரிய வந்ததால் கோவிலில் ஏற்பட்ட பரபரப்பு அடங்கியது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+