துணை நடிகைக்கு செக்ஸ்' டார்ச்சர், கொல்ல முயற்சி-பஸ் அதிபர் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை: துணை நடிகைக்கு செக்ஸ் டார்ச்சர் தந்து அவரை கொலை செய்ய முயன்ற பஸ் நிறுவன கைது செய்யப்பட்டார்.

சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த லலிதா (40) ஏராளமான படங்களில் நடித்துள்ள துணை நடிகை. டிவி தொடர்களிலும் நடித்து வரும் இவர் வாயில் ரத்தம் வழிந்த நிலையில், உடல் முழுவதும் படு காயங்களுடன் சென்னை ஐஸ்-ஹவுஸ் காவல் நிலையத்திற்கு அழுதபடியே வந்து நேற்று ஒரு புகார் மனு கொடுத்தார்.

அதி்ல், சென்னை மண்ணடியில் வசிக்கும் குருமூர்த்தியும் (34) நானும் திருமணம் செய்து கொள்ளாமலே கடந்த 4 வருடங்களாக கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்தோம்.

குருமூர்த்தி பஸ் நிறுவனம் வைத்துள்ளார். அவர் படத் தயாரிப்பிலும் ஈடுபட்டபோது தான் எனக்கும், அவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

திருமணம் செய்வதாக ஆசைகாட்டி கடந்த 4 வருடங்களாக என்னை இச்சைக்கு பயன்படுத்திக் கொண்டார். ஆனால் திருமணம் செய்யாமல் ஏமாற்றி வந்தார்.

போதையில் என்னை அடித்து உதைத்து சித்ரவதை செய்வார். விருப்பப்பட்ட நேரத்தில் நேரம், காலம் பார்க்காமல் ஆசைக்கு இணங்க அழைப்பார். அவரது விருப்பத்தை நிறைவேற்றாவிட்டால் அடித்து துன்புறுத்துவார்.

அவரது தொல்லை தாங்காமல் நான் தனியாக பிரிந்து வந்து திருவல்லிக்கேணியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறேன்.

ஏற்கனவே போலீசில் பலமுறை அவரது டார்ச்சர் குறித்து புகார் கொடுத்துள்ளேன். போலீசாரும் எங்கள் இருவரையும் அழைத்துப் பேசி அனுப்பி வைத்துள்ளனர்.

இப்போது தனியாக பிரிந்து வந்த பிறகும், அவரது தொல்லை தொடர்கிறது. அவரது கொடுமை தாங்க முடியாமல் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்குக் கூட முயன்றேன்.

இந் நிலையில் கடந்த 3ம் தேதி பகலில் குடிபோதையில் என் வீட்டுக்கு வந்து உடனே உல்லாசத்திற்கு அழைத்தார். நான் மறுத்தேன், அவரை வெளியே தள்ளி கதவை சாத்தினேன்.

கதவை உடைத்துக் கொண்டு திறந்த அவர் என்னை தெருவில் இழுத்துப் போட்டு அடித்து உதைத்தார். அதே போல இன்றும் (4ம் தேதி) நேற்றும் வீட்டுக்குள் வந்து என்னை அடித்து உதைத்து செக்ஸ்'க்கு அழைத்தார்.

நான் மறுத்ததால் தண்ணீர் வாளியில் எனது தலையை மூழ்க வைதது கொல்ல முயற்சித்தார். அவரிடம் இருந்து தப்பி வந்து நான் இந்த புகாரை கொடுத்துள்ளேன்.

அவர் மீது உடனே நடவடிக்கை எடுத்து, எனது உயிருக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என லலிதா தனது புகாரில் கூறியிருந்தார்.

கதறியழுதபடி, உடலெங்கும் ரத்தக் காயங்களுடன் வந்த லலிதாவின் மனு தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்க துணை கமிஷனர் மெளரியா உத்தரவிட்டார்.

இதையடுத்து குருமூர்த்தி மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை நேற்று மாலை கைது செய்தனர்.

ரூ.2,000 பணம் கேட்டதாகவும், அதைக் கொடுக்காததால் லலிதா பொய் புகார் கொடுத்துள்ளதாக குருமூர்த்தி போலீசாரிடம் கூறினார்.

இதை ஏற்காத போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+