திருமணமான முன்றே நாட்களில் வரதட்சணை கொடுமை
திண்டுக்கல்: திருமணமான முன்றே நாட்களில் வரதட்சணை கேட்டு விரட்டியதாக காதல் கணவன் மீது கலெக்டரிடம் இளம்பெண் புகார் கொடுத்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், பழநியை அடுத்த தாளையம் பகுதியை சேர்ந்தவர் பஞ்சவர்ணம், கூலி தொழிலாளி. அதே ஊரைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் கொத்தனார்.
ஒரே இடத்தில் வேலை செய்ததால் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. அருகில் உள்ள ஊர்களுக்கு அடிக்கடி சென்று உல்லாசமாக இருந்துள்ளனர்.
இந்நிலையில் பஞ்சவர்ணத்தை, ரமேஷ் கோவையில் உள்ள ஒரு கோவிலில் வைத்துத் திருமணம் செய்து கொண்டார். பின்பு தனது வீட்டிற்கு பஞ்சவர்ணத்தை அழைத்துச் செல்லாமல், பல்லடத்தில் வாடகை வீடு எடுத்து குடியமர்த்தினார். இருவரும் சந்தோஷமாக இருந்தனர்.
காதலித்து கல்யாணம் செய்த பஞ்சவர்ணம், மூன்றே நாட்களில் ரமேஷுக்குக் கசந்து விட்டது. பஞ்சவர்ணத்தின் கழுத்தில் இருந்த தாலியை பறித்துக் கொண்டு துன்புறுத்தியுள்ளார்.
பின்னர் வரதட்சணையாக ரூ 50 ஆயிரமும், 10 பவுன் நகையும் வாங்கி வரும்படி பஞ்சவர்ணத்தை அடித்து உதைத்து துரத்தியதாக கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பஞ்சவர்ணம், இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளார். அதில், ரமேஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications