புலிகளுக்காக கேரளாவில் கட்டப்பட்டு வந்த படகு பறிமுதல்
கொச்சி: விடுதலைப் புலிகளுக்காக கேரளாவில் கட்டப்பட்டு வந்த பெரிய இயந்திரப் படகை தமிழக கியூ பிரிவு போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
சமீபத்தில் திருச்சியில் இலங்கைத் தமிழரான பிரேம்ராஜ் உள்ளிட்ட இருவர் பிடிபட்டனர். அவர்களிடம் கியூ பிரிவு போலீஸார் நடத்திய விசாரணையில் இருவருக்கும் கடற்புலிகள் பிரிவினருடன் நெருங்கிய தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் பரத்சந்திரன் தலைமையிலான 5 பேர் கொண்ட தனிப்படை கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள முனம்பம் என்ற இடத்திற்கு விரைந்தது.
அங்கு சுதா படகு கட்டும் இடத்திற்குச் சென்ற தமிழக போலீஸ் குழு அங்கு கட்டப்பட்டு வந்த படகைப் பறிமுதல் செய்தது. இந்தப் படகு விடுதலைப் புலிகளுக்காக கட்டப்பட்டு வந்ததாகும்.
படகு என்று கூறப்பட்டாலும் கூட இது சிறிய கப்பல் போல பிரமாண்டமாக உள்ளது. கட்டப்பட்டு முடியும் தருவாயில் அந்தப் படகு இருந்தது.
இந்தப் படகு கட்டும் நிறுவனத்தை இஸ்மாயில், கோயா, முரளி ஆகியோர் இணைந்து நடத்தி வருகின்றனர். இந்த நிறுவனத்தின் ஊழியரான ஜோசப் பென்னி என்பவர் இதுகுறித்துக் கூறுகையில் கோயா, முரளி சொல்லித்தான் இந்தப் படகை கட்டி வந்தோம். இது விடுதலைப் புலிகளுக்காக ஆர்டர் கொடுக்கப்பட்டது என்பது எங்களுக்குத் தெரியாது என்றார் அவர்.
இந்தப் படகை கட்டுவதற்காக ரூ. 50 ஆயிரம் முன்பணமாக கொடுக்கப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.
படகைக் கைப்பற்றிய தமிழக போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் கடும் கெடுபிடிகள் நிலவுவதால், தங்களது செயல்பாடுகளை கேரளாவுக்கு புலிகள் மாற்றி விட்டதாக சமீப காலமாக செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. ஆனால் இதை கேரள அரசு மறுத்து வந்தது. ஆனால் தற்போது பெரிய அளவிலான படகு ஒன்று புலிகளுக்காக கட்டப்பட்டு வந்துள்ள தகவல் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications