இந்தியாவில் 24 கோடி பேரிடம் செல்போன்கள்

மும்பையில் நடந்த 6வது சர்வதேச தகவல் தொடர்பு மாநாட்டில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சமீப காலமாக இந்தியாவில் செல்போன் சந்தாதாரர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்து வருகிறது. இந்த விஷயத்தில் சீனாவை இந்தியா படு வேகமாக ஓவர்டேக் செய்துள்ளது.
இந்திய செல்போன் சந்தாதாரர்கள் குறித்து ஹெக்ஸவேர் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைவர் அதுல் நிஷார் கூறுகையில்,
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 1.38 கோடி சந்தாதாரர்கள் மட்டுமே இருந்தனர். ஆனால் இப்போது இந்த எண்ணிக்கை 24.2 கோடியாக விஸ்வரூபம் எடுத்துள்ளது.
ஜனவரி மாதம் மட்டும் புதிதாக 87.7 லட்சம் சந்தாதாரர்கள் இணைந்துள்ளனர். இதன் மூலம் இந்தியா, சீனாவை முந்தியுள்ளது. 2012ம் ஆண்டில் இந்தியாவில் 49 கோடி சந்தாதாரர்கள் இருப்பார்கள்.
செல்போன் வீச்சு அதிகமாக இருந்தபோதிலும், பிராட்பேண்ட் பரவல் படு மெதுவாக இருக்கிறது. அடிப்படை கட்டமைப்பு பிரச்சினைகள் இன்னும் நிலவுவதால் பிராட்பேண்ட் சேவையில் சுணக்கம் காணப்படுகிறது. இந்தியாவில் தற்போது 32.4 லட்சம் பிராட்பேண்ட் சந்தாதாரர்கள்தான் உள்ளனர் என்றார் அவர்.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் சுமித் செளத்ரி கூறுகையில், கடலுக்கடியில் செல்லும் கேபிள்களை மட்டுமே நம்பி பிராட்பேண்ட் சேவையைத் தர வேண்டியுள்ளது. இதனால் அதிக அளவில் சேவையை தர முடியில்லை. இதில் அடிக்கடி பைபர் கேபிள்கள் துண்டிக்கப்படுவதால் இணைப்பு துண்டிக்கப்படுவதும் நடக்கிறது.
பைபர் ஆப்டிக் வைமேக்ஸ் இதற்கு மாற்றாக அமையக் கூடும். ஆனால் அதற்கு நிறைய செலவாகிறது. வைமாக்ஸ் தொழில்நுட்ப சேவைக்கு அரசு அதிக அளவிலான கவனம் செலுத்தி முன்னுரிமை தர வேண்டும்.
அடுத்த 2 ஆண்டுகளில் ரிலையன்ஸ் நிறுவனம் நாடு முழுவதும் புதிதாக 40 ஆயிரம் சிக்னல் டவர்களை நிர்மாணிக்க திட்டமிட்டுள்ளது. இது மிகப் பெரிய சாதனையாகும். காரணம், எங்களது முதல் 9000 டவர்களை நிறுவ எங்களுக்கு 6 ஆண்டுகள் பிடித்தது.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் ரிலையன்ஸ் வேர்ல்ட் கிளைகளின் எண்ணிக்கை தற்போது இருப்பதை விட இரட்டிப்பாகும்.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் பிக் டிவி டிடிஎச் சேவை தொடங்கிய பின்னர் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் சேவை மேலும் முக்கியத்துவம் பெறும் என்றார் அவர்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications